இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. ஜூன் 27, வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை நான்காவது நாளாகவும் ஏற்றத்துடன் முடிந்தது. உலகளாவிய சந்தைகளின் சாதகமான போக்கு இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெள்ளிக்கிழமை நான்காவது உலகளாவிய காரணிகளால் நல்ல லாபத்துடன் முடிவடைந்த நிலையில் திங்கட்கிழமை எப்படி இருக்கும் என்பது அனைவரின் முக்கியமான கேள்வியாக உள்ளது. இதற்கிடையில் 2 நிபுணர்கள் இந்த வாரம் எந்த பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்ந்து 84,058.90 ஆகவும், நிஃப்டி 50, 89 புள்ளிகள் உயர்ந்து 25,637.80 ஆகவும் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 0.36% ஏற்றமும், நிஃப்டி 50 0.35% ஏற்றமும் பதிவு செய்தது. பெரிய நிறுவன பங்குகளை போலவே சிறிய மற்றும் நடுத்தர நிறுவன பங்குகளும் நல்ல ஏற்றத்தை சந்தித்தன.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.38 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.54 சதவீதமும் அதிகரித்தன. கடந்த நான்கு நாட்களில், சென்செக்ஸ் 2,162 புள்ளிகள் உயர்ந்து கிட்டத்தட்ட 3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிஃப்டி 50 இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட அதே அளவு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
100 ரூபாய் பங்குகள்:
இந்த நிலையில் சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சுமீத் பாகாடியா, நிஃப்டி 50 குறியீடு முந்தைய நாள் முடிவை விட உயர்ந்து முடிவடைந்ததால் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்.
சுமீத் பாகாடியா ஜூன் 30 திங்களன்று வாங்க வேண்டிய மூன்று பங்குகளைப் பரிந்துரைத்துள்ளார். அவை லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ், முக்தா ஆர்ட்ஸ் மற்றும் ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் ஆகும்.
திங்களன்று வாங்க வேண்டிய மூன்று பங்குகள்:
1] லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ்: ரூ.68.7-க்கு வாங்கவும் | டார்கெட் விலை: ரூ.73.5 | ஸ்டாப் லாஸ்: ரூ.66.30
2] முக்தா ஆர்ட்ஸ்: ரூ.88.96-க்கு வாங்கவும் | டார்கெட் விலை: ரூ.95 | ஸ்டாப் லாஸ்: ரூ.85.5
3] ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ்: ரூ.63.23-க்கு வாங்கவும் | டார்கெட் விலை: ரூ.68 | ஸ்டாப் லாஸ்: ரூ.61
200 ரூபாய் பங்குகள்:
இதேபோல் ஆனந்த் ரதியின் துணைத் தலைவர் மெஹுல் கோத்தாரி கூறுகையில், இந்திய பங்குச் சந்தையின் ஏற்றத்திற்கு ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான geopolitical tensions தணிந்ததே முக்கிய காரணம். இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தியது.
இந்த நிலையில் ரூ.200-க்கு கீழ் உள்ள பங்குகளை வாங்க, ஆனந்த் ரதியின் மெஹுல் கோத்தாரி-யின் பரிந்துரையில் எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் மற்றும் சிஇஎஸ்சி பங்குகள் உள்ளது.
1] எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ்: ரூ.114 அருகில் வாங்கவும்; டார்கெட் விலை: ரூ.123; ஸ்டாப் லாஸ்: ரூ.109
2] ஜீல்: ரூ.142 அருகில் சரிவில் வாங்கவும்; டார்கெட் விலை: ரூ.152; ஸ்டாப் லாஸ்: ரூ.137
3] சிஇஎஸ்சி: ரூ.172 அருகில் வாங்கவும்; டார்கெட் விலை: ரூ.182; ஸ்டாப் லாஸ்: ரூ.167
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அதேசமயம், சந்தையில் உள்ள அபாயங்களை உணர்ந்து முதலீடு செய்வது நல்லது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications