நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தினத்தன்று பல துறைகள் குறிப்பாக பல நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அந்த வகையில், எந்தெந்த துறைகளில் எந்த பங்குகள் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலதன செலவினம் மற்றும் உள்கட்டமைப்பு: தேர்தலுக்கு பிறகு ஆர்டர் வரத்து குறைந்தது குறித்த கவலைகள் இந்த துறையின் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை பாதித்தது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மூலதன செலவினங்களில் 12.3 சதவீதம் குறைந்தது. மூலதன செலவினம்-வருவாய் விகிதமும் 28 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக குறைந்துள்ளது. இது திட்டங்களை வேகமாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை குறிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறையை சேர்ந்த எல் அண்ட் டி மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் அதிக கவனத்தை பெறும்.

சாலைப் போக்குவரத்து: எதிர்வரும் பட்ஜெட்டில், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் 5-6 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் 12,000-13,000 கி.மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைச்சகத்தின் லட்சிய திட்டத்தால், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்சன் மற்றும் அசோகா பில்ட்கான் ஆகிய 2 நிறுவனங்களும் பயன் அடைய தயாராக உள்ளன.
மின்சாரம்: கடந்த பட்ஜெட்டில் மின்சார அமைச்சகத்துக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு 16 சதவீதம் அதிகரித்தது. நாளைய பட்ஜெட்டிலும் கடந்த ஆண்டு போலவே ஒதுக்கீட்டை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. மத்திய பட்ஜெட்டால் சீமென்ஸ் மற்றும் தெர்மாக்ஸ் நிறுவனங்கள் ஆதாயம் காண வாய்ப்புள்ளன.
பாதுகாப்பு: நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டுமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து, பாதுகாப்பு அமைச்சகம் 2025ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு பட்ஜெட்டில், குறிப்பாக மின்னணுவியல், வாகனங்கள், மற்றும் விமானங்களுக்கான மூலதன செலவினங்களில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு உற்பத்தி துறையில் உள்ள நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். குறிப்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் பிஇஎல். பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஒட்டு மொத்த பாதுகாப்பு சந்தையில் 60 சதவீத பங்கை கொண்டுள்ளது.
ரயில்வே: எதிர்வரும் பட்ஜெட்டில், ரயில்வே மூலதன செலவினங்களுக்காக ரூ.3 லட்சம் கோடி வரை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில்களில் முதலீடுகள் உள்பட திறனை அதிகரிப்பது, ரயில் பெட்டிகளை மேம்படுத்துவது மற்றும் உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. ஆர்விஎன்எல், பிஇஎம்எல் மற்றும் ஐஆர்எப்சி ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளலாம்.
ரியல் எஸ்டேட்: பட்ஜெட்டில் மலிவு விலை வீட்டுவசதிக்கான அளவுகோல்கள் மற்றும் வரி சலுகைகள் மற்றும் மானியங்கள் போன்ற ஊக்கங்கள் மற்றும் தொழில்துறை நிலை போன்ற அறிவிப்புகள் தொடர்பாக வெளியானால் டெவல்ப்பர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கக்கூடும். இதனால் ஓபராய் ரியால்டி, பிஎன்பி ஹவுசிங் மற்றும் ஏஏவிஏஎஸ் பைனான்சியர்ஸ் பலன் அடையலாம். இந்த பங்குகள் மீது முதலீட்டாளர்கள் ஒரு கண் வைத்து கொள்வது நல்லது.
நுகர்வு: மத்திய பட்ஜெட்டில், நிலையான விலக்கு அதிகரிப்பு மற்றும் அதிக வரி விலக்கு வரம்புகள் போன்ற செலவழிப்பு வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட வரி நடவடிக்கைகள் அறிவிக்க வாய்ப்புள்ளது. எரிபொருள் மீதான கலால் வரியை குறைப்பது மூலம் பணவீக்க அழுத்தங்களை மேலும் குறைக்கலாம் மேலும் அது நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்கும். இது நடந்தால், நுகர்வு துறையை சேர்ந்த இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி,டாபர்,மாரிக்கோ மற்றும் எமாமி பங்குகள் ஆதாயம் அடையலாம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய நம் நாடு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு பியு கேயுஎஸ்யுஎம் மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற திட்டங்களும் துணைபுரிகின்றன. மத்திய பட்ஜெட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. இத்துறையை சேர்ந்த வாரீ எனர்ஜிஸ், ஐனாக்ஸ் விண்ட், என்டிபிசி கிரீன், அதானி சோலார், போரோசிஸ் ரீனிவபிள்ஸ், ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் ஆகிய பங்குகள் ஆதாயம் அடையும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications