டிரான்ஸ்பார்மஸ் அண்ட் ரெக்டிபையர்ஸ் இந்தியா (டிஆர்ஐஎல்) நிறுவனம் நாட்டின் முன்னணி டிரான்ஸ்பார்மர் உற்பத்தியாளராக உள்ளது. சமீபகாலமாக பங்குச் சந்தையில், பென்னி ஸ்டாக்கான இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அதன் பங்கு விலையில் வியத்தக ஏற்றம் கண்டு வருவதே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக இப்பங்கின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலை ரூ.74.50லிருந்து ரூ.948ஆக உயர்ந்துள்ளது. அதாவது கணக்கீட்டு காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,169 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு கொடுத்த ஆதாயத்தை பார்த்தால், அட இந்த பங்கை வாங்காமால் விட்டு விட்டோமே என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பங்கு விலை ரூ.8ஆக இருந்தது. ஆனால் தற்போது இப்பங்கின் விலை ரூ.948.60 (கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி) உள்ளது.

ஆக, கடந்த 5 ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மஸ் அண்ட் ரெக்டிபையர்ஸ் இந்தியா பங்கு முதலீட்டாளர்களுக்கு 11,169 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவன பங்கில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.18 கோடியாக வளர்ந்திருக்கும்.
இந்நிறுவனம் தொடர்ந்து நல்ல ஆர்டகளை பெற்றது, வலுவான நிதி வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மின்சார தேவை போன்றவையே இந்நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு வழிவகுத்தன.
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.631 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது. மேலும், இந்நிறுவனம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையின்படி, ரூ.3,686 கோடி மதிப்பிலான செயல்படுத்தப்படாத ஆர்டர் புத்தகத்தை கொண்டுள்ளது.
மேலும், ரூ.19,000 கோடி மதிப்பிலான வர்த்தக விசாரணைகள் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளன. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.545.31 கோடி ஈட்டியுள்ளது. மேலும் நிகர லாபமாக ரூ.50.51 கோடி ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று பங்கு வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் குறைந்து ரூ.901.20ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications