திரிவேணி டர்பைன் லிமிடெட் நிறுவனம் மின்உற்பத்தி உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சப்ளை செய்வதில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் நாட்டின் முன்னணி தொழில்துறை நீராவி டர்பைன் உற்பத்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் நிலையான நிதி நிலை முடிவுகள் மற்றும் வர்த்தக வளர்ச்சியை கொண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் விரும்பும் பங்குகளில் ஒன்றாக இந்நிறுவனம் உள்ளது.
திரிவேணி டர்பைன் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. 2024 டிசம்பர் காலாண்டில் திரிவேணி டர்பைன் லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.92.4 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டைக் காட்டிலும் 35.5 சதவீதம் அதிகமாகும்.

2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.68.2 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.503.4 கோடி ஈட்டியுள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் திரிவேணி டர்பைன் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.431.7 கோடி ஈட்டியிருந்தது.
நீண்ட கால அடிப்படையில் திரிவேணி டர்பைன் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 529 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 பிப்ரவரி 6ம் தேதியன்று பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.95ஆக இருந்தது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை அதிகபட்சமாக ரூ.598 வரை சென்றது. அதேவேளையில், கடந்த 5 ஆண்டுகளில் சென்செக்ஸ் 89.77 சதவீதம் மட்டுமே உயர்வு கண்டது.
கடந்த ஒரு வருடத்தில் திரிவேணி டர்பைன் நிறுவன பங்கின் விலை 23 சதவீதம் வளர்ச்சி கண்டது. அதேசமயம் கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 179 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2024 நவம்பர் 26ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சவிலையான ரூ.885ஐ எட்டியது.
தற்போது இப்பங்கின் விலை அதன் உச்ச விலையிலிருந்து 34 சதவீதம் குறைவாக உள்ளது. வரும் நாட்களில் இந்நிறுவன பங்கின் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தரகு நிறுவனமான மிரே அசெட் ஷோ்கான் நிறுவனம், திரிவேணி டர்பைன் நிறுவன பங்கின் இலக்கு விலை ரூ.750ஆக நிர்ணயம் செய்துள்ளது.
More From GoodReturns

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications