அமெரிக்காவின் பங்குச் சந்தையில் திங்களன்று வர்த்தகம் துவங்கும்போதே பெரும் சரிவுடன் ஆரம்பமானது. இதுவே இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்து, அன்னிய முதலீட்டாளர்களின் வருகை காரணமாக புதிய நம்பிக்கை பிறந்தது. ஆனால் அமெரிக்க வர்த்தகத்தை பார்க்கும் போது நாளை மும்பை பங்குச்சந்தை நாளை கதகளி ஆடப்போகுது என்ற தெரிகிறது.
வால் ஸ்ட்ரீட்-ல் முக்கிய குறியீடுகள் ஒவ்வொன்றும் 1%க்கும் அதிகமான இழப்பை சந்தித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மீது தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதிபரின் பேச்சு மற்றும் ஜெரோம் பவல்-ஐ எப்போத வேண்டுமானாலும் தனது பதவியில் இருந்து நீக்குவது குறித்த மிரட்டல்கள், மத்திய வங்கியின் சுதந்திரம் குறித்த அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்தது. ஏற்கனவே வர்த்தகப் போர் காரணமாக வர்த்தக சந்தை தலைகீழாக மாறி முதலீட்டாளர்களை பணம் தினமும் கரைந்து வரும் வேளையில், டிரம்ப் - பவல் விவகாரம் முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீடு 1061.08 புள்ளிகள் குறைந்து 38,088.83 புள்ளிகளை எட்டியுள்ளது. எஸ்&பி 500 குறியீடு 144.28 புள்ளிகள் குறைந்து 5,138.00 புள்ளிகளாக சரிந்தது. தொழில்நுட்ப நிறுவனங்களின் குறியீடான நாஸ்டாக் 498.84 புள்ளிகள் குறைந்து 15,788.35 புள்ளிகளாக குறைந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹஸ்ஸெட் வெளியிட்ட கருத்துக்கள், பங்குச்சந்தையில் பதற்றத்தை அதிகரித்ததுள்ளது. அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜெரோம் பவல் "பதவி நீக்கம் விரைவில் நடக்க வேண்டும்" என்று டிரம்ப் தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு கெவின் ஹஸ்ஸெட் இந்த தகவலை வெளியிட்டார். ஜெரோம் பவல் மீது டிரம்ப்-ன் தொடர் விமர்சனம் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் நாணயக் கொள்கையை நிர்ணயிப்பதில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் மாயமாகிறது என்பது தான் தற்போது முதலீட்டாளர்களின் கவலை.
டிரம்ப்-ன் நடவடிக்கையால் அமெரிக்க பொருளாதாரம் திவாலாகினால், இதை சரிவில் இருந்து காப்பற்றும் ஒரு கை ஃபெடரல் ரிசர்வ் தான். இந்த நிலையில் முதலீட்டாளர்கள் ஃபெடரல் ரிசர்வ்-ன் சுதந்திரத்தில் எவ்விதமான பாதிப்பும் இருக்க கூடாது என்றும், அரசின் நெருக்கடியும் இருக்க கூடாது என விரும்புகின்றனர்.
டிரம்ப் நிர்வாகம் விதித்த கடுமையான வர்த்தக வரிகளால் ஏற்கனவே அமெரிக்க சொத்துக்களின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்திருந்த நிலையில், தற்போது டிரம்ப் கொடுக்கும் நெருக்கடியால் வட்டி விகிதத்தை ஜெரோம் பவல் குறைத்தால் கட்டாயம் அமெரிக்கா பொருளாதாரத்தை காப்பாற்ற முடியாது என்பது ஃபெடரல் ரிசர்வ்-ன் கணக்கு.
ஸ்விஸ்கோட் வங்கியின் மூத்த சந்தை ஆய்வாளர் ஐபெக் ஓஸ்கார்டெஸ்காயா கூறுகையில், ஜெரோம் பவல்-ஐ பதவியில் நீக்க டிரம்ப்பிற்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை என்று கூறினார்.
மும்பை பங்குச்சந்தை இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 855.30 புள்ளிகள் உயர்ந்து 79,408.50 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 273.90 புள்ளிகள் உயர்ந்து 24,125.55 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
ஏப்ரல் 22 ஆம் தேதி காலை வர்த்தகத்தில் GIFT NIFTY குறியீடு 0.33 சதவீதம் உயர்வுடன் 24167 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் மும்பை பங்குச்சந்தையில் பெரும் சரிவு இருக்காது அதவேளையில் மந்தமான வர்த்தகத்தகம் பதிவாகலாம் என கணிக்கப்படுகிறது. நேற்று அமெரிக்க பங்குச்சந்தையின் வர்த்தக முடிவில் டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக், எஸ்&பி 500 குறியீடு என அனைத்தும் 2.5 சதவீதம் அளவில் சரிந்துள்ளது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications