அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்குள் வரும் கிட்டத்தட்ட அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் தற்காலிக வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இது அமெரிக்க உச்சநீதிமன்றம் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை ரத்து செய்த அடுத்த நாளே 15 சதவீத வரியை புதிதொரு சட்டத்தின் கீழ் விதித்துள்ளார்.
இந்த திடீர் மாற்றங்கள் இந்திய பங்குச் சந்தையில் நிச்சயமின்மையை உருவாக்கியுள்ளன. இதனால் 2 நாள் விடுமுறை முடிந்த நாளை பங்குச்சந்தை வர்த்தகத்திற்காக திறக்கப்படும் வேளையில், முதலீட்டு சந்சை எப்படி இயங்கும் என்பதில் பெரும் அச்சத்துடன் முதலீட்டாளர்கள் இருக்கின்றனர்.

பங்குச்சந்தையின் உண்மையான பிரச்சினை என்ன?
டிரம்ப் வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்வது பெரிய சுமை இல்லை, காரணம் இந்தியா மீது இதற்கு முன்பு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் குறைவாக 15 சதவீதம் மட்டுமே விதிக்கப்படுவது சாதகமானது தான், ஆனால் உலக நாடுகளுடன் போட்டிப்போடுவதில் தான் இந்தியாவுக்கான லெவரேஜ் இல்லாமல் இருப்பது பிரச்சனை.
இதை தாண்டி பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அமெரிக்க கொள்கை மாற்றங்களின் கணிக்க முடியாத தன்மையே உண்மையான கவலை.இதனால் நாளை ஆசிய சந்தையில் துவக்கத்தில் எப்படியிருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பங்குச்சந்தை நிலை
கோட்டாக் மஹிந்திரா ஏஎம்சி நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா கூறுகையில், அமெரிக்க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பல்வேறு சட்டங்களைப் பயன்படுத்தி இந்த வரிகளை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சி செய்யும், இதனால் வரியில் பெரிதாக மாற்றம் இல்லாமல் இருக்கும், அப்படி குறைக்கப்பட்டாலும், குறுகிய காலத்தில் மட்டுமே இதன் தாக்கம் இருக்கும் என தெரிவித்தார். இதனால் தற்போது இந்திய சந்தையில் தற்போது இருக்கும் மந்த நிலை தொடரும் என தெரிவித்தார்.
மேலும் சந்தை நிபுணர் சமீர் அரோரா சொல்வது, இந்தியாவுக்கு 15 சதவீதம் வரி என்பது தனிப்பட்ட பாதிப்பு இல்லை. ஆனால் முன்பு 10 சதவீதம் இருந்த 90க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போது 15 சதவீதத்துக்கு செல்கின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்றவை இதில் அடங்கும். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், நிறுவனங்கள் மத்தியில் போட்டி சமமாக வைத்திருக்கும்.
$175 பில்லியன் வரி வசூல் ரீபண்ட்
எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் தொழில்நுட்ப ஆய்வு தலைவர் சுதீப் ஷா கூறுகையில், கடந்த ஒரு ஆண்டில் ரெசிப்ரோக்கல் வரி மூலம் வசூலிக்கப்பட்ட சுமார் 175 பில்லியன் டாலர் வரி தொகைக்கு திருப்பி செலுத்த கோரிக்கைகள் வந்தால், அது சந்தையில் புதிய ஏற்ற இறக்கங்களை உருவாக்கலாம் என தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை என்ன?
சமீபத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இடைக்கால வர்த்தக புரிந்துணர்வு செய்துள்ளன. அதன்படி, இந்திய பொருட்களுக்கு 18 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு சில வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளை குறைத்தது. இப்போதைய 15 சதவீத பொது வரி அறிவிப்பு இந்தியாவின் வரி சுமை குறைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
முதலீட்டாளர்கள் வரி உயர்வை விட கொள்கை தெளிவை கவனிக்க வேண்டும். அமெரிக்கா தொடர்ந்து வரிகளை மாற்றுமா அல்லது இது தற்காலிகமா என்பது சந்தையின் அடுத்த சந்தை போக்கை தீர்மானிக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications