டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் ஒரு ஹோல்டிங் நிறுவனமாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், வாகன பாகங்கள் மற்றும் கணினி சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனம் கனரக வணிக வாகனங்கள், பயணிகள் கார்களை விநியோகம் செய்கிறது மற்றும் நிதி மற்றும் காப்பீடு சேவைகளை வழங்குகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும் இ்ந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது. இதனால் டிவிடெண்ட் வருவாயை விரும்பும் முதலீட்டாளர்கள் எப்போதும் இந்நிறுவன பங்கின் மீது ஒரு கண் வைத்து இருப்பார்கள்.

டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பங்குச் சந்தை அமைப்பிடம் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2024-25ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு ரூ.5 முகமதிப்பு கொண்ட 2.02 கோடி ஈக்விட்டி பங்குகளுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.93 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இடைக்கால டிவிடெண்ட் பெறுவதற்கான பங்குதாரர் தகுதியை நிர்ணயிப்பதற்கான பதிவு தேதி மார்ச் 8 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவன சட்டம் 2013ஆல் கட்டாயப்படுத்தப்பட்டபடி, ஈவுத்தொகை அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 2024 மார்ச் மாதத்தில் ஒரு பங்குக்கு ரூ.94 இடைக்கால டிவிடெண்டாக அறிவித்தது. 2023 பிப்ரவரியில் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.59 டிவிடெண்ட் அறிவித்தது. 2022 மார்ச் மாதத்தில் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.44 டிவிடெண்ட் அறிவித்தது.
கடந்த டிசம்பர் காலாண்டில் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வருவாய் ரூ.149.43 கோடியாக அதிகரித்துள்ளது.. மேலும் அந்த காலாண்டில் அந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.85.07 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வருவாயாக ரூ.1,608 கோடியும், நிகர லாபமாக ரூ.339 கோடியும் ஈட்டியிருந்தது.
கடந்த ஆண்டில் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பங்கின் விலை 9 சதவீதம் அதிகரித்தது. குறிப்பாக கடந்த செப்டம்பரில் இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.15,115.30ஐ எட்டியது. ஆனால் 2024 அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான கடந்த 5 மாதங்களிலும் இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. இருப்பினும் இந்த மாதத்தில் இப்பங்கின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.16 சதவீதம் குறைந்து ரூ.8,934.90ஆக உள்ளது. தற்போது இப்பங்கு அதன் உச்சவிலையை காட்டிலும் சுமார் 41 சதவீதம் குறைவாக உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications