இந்தியாவில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினமும், ஜனவரி 26 அன்று குடியரசு தினமும் என இரண்டு முக்கிய தினங்களை தேசிய விடுமுறை உடன் கொண்டாடப்படுகின்றன. இவை இரண்டுமே அணிவகுப்புகள், மற்றும் கொடியேற்றுதல் ஆகியவற்றுடன் கொண்டாடப்பட்டாலும், இரண்டும் வேறுபட்டவை.
சுதந்திர தினம் 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா பெற்ற விடுதலையைக் குறிக்கிறது. அதே சமயம், குடியரசு தினம் 1950-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாறியதை நினைவுகூருகிறது. இந்த ஆண்டு இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இத்தினத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அவர்களது தியாகங்களையும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றுகின்றனர்.

சுதந்திர தினத்தன்று, பிரதமர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசிய கீதத்துடன் உரையாற்றி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். சுதந்திர தினமும் குடியரசு தினமும் ஏன் ஒவ்வொரு இந்தியருக்கும் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
குடியரசு தினம் ஜனவரி 26 அன்றும், சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்றும் கொண்டாடப்படுகின்றன. இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்றாலும், 1950-ல் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை குடியரசு நாடாகவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சபை நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. எனவே, குடியரசு தினம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாலும், அரசியலமைப்பாலும் ஆளப்படும் ஒரு குடியரசாக இந்தியா மாறியதைக் குறிக்கும் ஒரு தேசிய விடுமுறையாகும்.
மறுபுறம், சுதந்திர தினம், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தரப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரத்தையும், மன உறுதியையும் நினைவுகூருகிறது. இந்த நாள் தேசிய பெருமை மற்றும் கௌரவத்தின் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினக் கொண்டாட்டத்தின் முக்கிய ஈர்ப்பு, டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் தொடங்கி இந்தியா கேட்டில் முடிவடையும் வருடாந்திர அணிவகுப்பு ஆகும். இந்த நாளில், இந்திய குடியரசுத் தலைவர் கர்தவ்ய பாதையில் கொடியேற்றுவார். இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றின் கலாச்சார மற்றும் சமூக பாரம்பரியம், அணிவகுப்புகள் மற்றும் விமான சாகசங்கள் காட்சிப்படுத்தப்படும்.
மேலும் தகுதியான குடிமக்களுக்கு இந்திய குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இதோடு வீரதீர சாகசங்கள் புரிந்த வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா, அசோக் சக்ரா மற்றும் வீர் சக்ரா போன்ற விருதுகளும் வழங்கப்படுகின்றன. குடியரசு தின அணிவகுப்பில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை முக்கிய விருந்தினராக அழைக்கும் வழக்கம் உள்ளது.
சுதந்திர தினத்தன்று, பிரதமர் செங்கோட்டையிலிருந்து கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். சுதந்திர தினம் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் மற்றும் கொடியேற்றும் விழாக்கள் ஆகியவற்றுடன் முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.


Click it and Unblock the Notifications