22,300% லாபம்.. 50 மல்டிபேக்கர் பங்குகளை உருவாக்கிய ஒரே துறை.. ஜாக்பாட் தான்..!

மல்டி பேக்கர் பங்குகள் பல மடங்கு லாபம் தரக்கூடிய பங்குகளாகும். பங்கு சந்தையில் பலரும் வர்த்தகம் செய்து வந்தாலும் அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே.

பங்கு சந்தையில் வர்த்தகம் செய்பவர்களில் பலர். அவற்றில் சில, மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள், இன்ட்ராடே டிரேடர்கள், நீண்டகால முதலீட்டாளர்கள் என பல வகை உண்டு. இதில் அதிக லாபமும், குறைந்தளவிலான ரிஸ்க் எடுத்தவர்கள் என்றால் நீண்டகால முதலீட்டாளர்களாகத் தான் இருப்பர்.

ஆனால் முதலீடு செய்யும்போது இருக்கு நிதானம், அதனை செய்தபிறகு பலரிடமும் இருக்காது. இதனாலேயே பலரும் நஷ்டம் காண்பர். ஆனால் பொறுமையுடன், சற்று தெரிய வேண்டிய தகவல்களை சரியாக தெரிந்து கொண்டு காத்திருந்தால், நிச்சயம் வெல்லலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்குகள்.

லாபம் கொடுக்க கூடிய பங்குகள்

லாபம் கொடுக்க கூடிய பங்குகள்

சமீபத்திய வருடங்களாகவே கெமிக்கல் பங்குகள் நல்ல லாபகரமான பங்குகளாக உள்ளன. இது சமீபத்திய காலத்தில் நல்ல லாபகரமான பங்குகளாகவும் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பின்பு நல்ல லாபம் கொடுக்கக் கூடிய பங்குகளாகவும் மாறியுள்ளன.

சீனாவால் இந்தியாவுக்கு லாபம்

சீனாவால் இந்தியாவுக்கு லாபம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிக அளவிலான கெமிக்கல்கள், சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. ஏற்கனவே சீனாவில் சுற்றுச் சூழலை சரி செய்யும் விதமாக பல கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்துள்ளன. இதற்கிடையில் இந்த வாய்ப்பானது இந்தியா கெமிக்கல் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

வர்த்தக மோதல்கள்

வர்த்தக மோதல்கள்

சீனாவின் சுற்றுசூழல் நடவடிக்கைக்கு மத்தியில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஓன்றியம் இடையேயான வர்த்தக மோதல்கள், வர்த்தகத்தினை பாதித்தது. இது உலகளாகவிய சப்ளை சங்கிலியினை பாதித்தது. இது இந்திய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது. இதன் மூலம் இந்திய கெமிக்கல் நிறுவனங்கள் சாதகமான பலனை அனுபவித்தன.

தூள் கிளப்பிய பெளஷாக்

தூள் கிளப்பிய பெளஷாக்

கடந்த 10 ஆண்டுகளில் 500% மேலாக ஏற்றம் கண்ட 50 கெமிக்கல் பங்குகளை பற்றித் தான் பார்க்க இருக்கின்றோம். அதில் பெளஷாக் நிறுவனம் 22,255% ஏற்றம் கண்டுள்ளது. இது ஜனவரி 10., 2012 நிலவரப்படி இந்த பங்கின் விலையானது 46.50 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, ஜனவரி 10, 2022ல் 10,384.85 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 22,000% வரையில் ஏற்றம்

22,000% வரையில் ஏற்றம்

இதனை தொடர்ந்து அல்கைல் அமின்ஸ் நிறுவனம் 21,987% ஏற்றத்தில் காணப்படுகின்றது.

அடுத்ததாக தீபக் நைட்ரேட் நிறுவனம் 17,093% ஏற்றத்திலும், ஜோதி ரெசின்கள் மற்றும் அட்ஹெசிவ்ஸ் 11,584% ஏற்றத்திலும், சாதனா நைட்ரோ செக் 10,453% ஏற்றத்திலும், பாலாஜி அமின்ஸ் 10,210% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.

 

என்னென்ன கெமிக்கல்கள்

என்னென்ன கெமிக்கல்கள்

இந்திய கெமிக்கல் வணிகத்தின் தற்போதைய மதிப்பானது 178 பில்லியன் டாலர் ஆகும். இது உலகின் ஆறாவது மிகப்பெரிய வணிக நாடாகவும், ஆசியாவில் 4வது பெரிய நாடகவும் உள்ளது.

இந்தியாவினை பொறுத்தவரையில் ஜவுளி, அக்ரோகெமிக்கல்கள், ஆட்டோமோட்டிவ் மற்றும் பார்மா உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்றது.

 

 கெமிக்கல் விற்பனை

கெமிக்கல் விற்பனை

கடந்த தசாப்தத்தில் இந்த துறையானது அபரிதமான வளர்ச்சியினை கண்ட போதிலும், உலகளாவிய கெமிக்கல் விற்பனையில் 3 - 4% மட்டுமே உள்ளது. எப்படியிருப்பினும் சீனாவினை பின் தள்ள தொடங்கியுள்ளது.

மேலும் உள்நாட்டில் அதிகரித்து வரும் தேவை, டிஸ்பசோபிள் வருமானம், வாழ்க்கை முறை மாற்றங்கள், அரசின் ஆதரவான கொள்கைகள் என பலவும் இந்த துறையை மேலும் ஊக்குவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த தொழிற்துறையானது 2025ம் நிதியாண்டில் 300 பில்லியன் டாலரை எட்டலாம் என எதிர்பார்ப்பதாக யெஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

 

 நல்ல லாபம் கொடுத்த பங்குகள்

நல்ல லாபம் கொடுத்த பங்குகள்

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், நவீன் ஃப்ளூரின் இண்டர்நேஷனல், அதுல் பிரிவி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் மற்றும் வினாதி ஆர்கானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 5,000% முதல் 10,000% வரையில் லாபம் கொடுத்துள்ளன.

எஸ் ஆர் எஃப் மற்றும் பிஐ இண்டஸ்ட்ரீஸ், அனுபம் ரசாயன், கோரமண்டல இண்டர்நேஷனல் மற்றும் சுதர்ஷன் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட பங்குகள் நல்ல லாபத்தினை கொடுத்துள்ளன.

 

2000% மேலாக ஏற்றம்

2000% மேலாக ஏற்றம்

தரம்சி மொரார்ஜி கெமிக்கல் நிறுவனம், திருமலை கெமிக்கல்ஸ், அலுஃப்ளூரைடு மங்கலம் ஆர்கானிக்ஸ், ஓரியண்டல் அரோமேட்டிக்ஸ், டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ், இண்டோ அமின்ஸ் மற்றும் ஃபினியோடெக்ஸ் கெமிக்கல் ஆகியவையும் ஜனவரி 2012 முதல் 2,000% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

***பங்கு சந்தையில் வணிகம் செய்யும் ஒருவருக்கு பங்கு சந்தையில் வழிகாட்டி என்று யாரும் கிடையாது, நம்முடைய அனுபவமே நமக்கு ஆசான். ஆக இது தகவல்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது பரிந்துரை அல்ல.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+