இந்தியாவில் வீட்டினை சுத்தம் செய்வது, ஏசி சர்வீஸ், வீட்டை தேடி வரும் சலூன் என பல புரட்சிகளை கொண்டு வந்தது தான் அர்பன் கம்பெனி நிறுவனம். ஒரு கிளிக் செய்தாலே நம் வீட்டை தேடி நிபுணர்கள் வந்து ஏசி, வாஷிங் மெசின் சர்வீஸ், வீட்டினை சுத்தம் செய்து தருவது, சலூன் சேவைகள் என அனைத்தையும் வழங்குவார்கள்.
அர்பன் கம்பெனி (Urban Company ) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனம் . இதன் ஒரு பகுதியாக நிறுவன விரிவாக்கத்துக்காக ஐபிஓ வெளியீடு செய்ய இருக்கிறது. செப்டம்பர் 10, புதன்கிழமை அன்று முதல் அர்பன கம்பெனி ஐபிஓவில் விண்ணப்பம் செய்யலாம்.

அர்பன் கம்பெனி ஐபிஓ-வின் ஒரு பங்கின் விலை 98 முதல் 103 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் 1,900 கோடி ரூபாய் திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மெயின்போர்டு ஐபிஓ செப்டம்பர் 12, வெள்ளிக்கிழமை அன்று முடிவடையும்.
அர்பன் கம்பெனி ஐபிஓ, ரூ.472 கோடிக்கு புதிய பங்கு வெளியீட்டையும், ரூ.1,428 கோடி ஆஃபர் ஃபார் சேல் முறையில் பங்கு விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் 145 பங்குகளாகவும், அதன் மடங்குகளாகவும் விண்ணப்பிக்கலாம்.
சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு ஐபிஓ தொகுப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ரூ.14,935 செலுத்த வேண்டும். இந்த ஐபிஓ-வில் 75% தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும் (QIBs), 15% நிறுவனமற்ற முதலீட்டாளர்களுக்கும் (NIIs), மீதமுள்ள 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தகுதியுள்ள ஊழியர்களுக்காக ரூ.2.5 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பங்கு விற்பனையில் இருந்து திரட்டப்படும் நிதியில், ரூ .190 கோடியை புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கும், கிளவுட் கட்டமைப்பிற்கும், ரூ.75 கோடியை அலுவலக குத்தகை கொடுப்பனவுகளுக்கும், ரூ.90 கோடியை சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும், மீதமுள்ளவற்றை பொது நிறுவன நோக்கங்களுக்கும் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அர்பன் கம்பெனி இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 51 நகரங்களில் செயல்படுகிறது. Investorgain.com இன் சமீபத்திய தரவுகளின்படி, அர்பன் கம்பெனி ஐ.பி.ஓ ஜி.எம்.பி (கிரே மார்க்கெட் பிரீமியம்) ரூ.10 ஆக இருந்தது.
இதன் பொருள், நிறுவனத்தின் பங்குகள் கிரே சந்தையில் அதன் வெளியீட்டு விலையை விட ரூ.10 அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. எனவே இது பிரீமியம் விலையில் தான் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications