இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப அடிப்படையிலான வீட்டு சேவை தளமான அர்பன் கம்பெனியின் பங்குகள், செப்டம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் சுமார் 57.5% பிரீமியம் விலையுடன் சுமார் ரூ.162.25-இல் பட்டியலிடப்பட்டன. மும்பை பங்குச் சந்தையில் ரூ.161 விலையில் பட்டியலிடப்பட்டது. அதாவது அர்பன் கம்பெனியின் ஐபிஓ வெளியீட்டு விலையான ரூ.103-ஐ விட 56% உயர்வில் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு அட்டகாசமான லாபத்தை அளித்துள்ளது.

இதன் மூலம் அர்பன் கம்பெனியின் ரூ.1,900 கோடி மதிப்பிலான IPO மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பங்கு விலை தொடர்ந்து உயர்வில் இருக்குமா என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது. காரணம் இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும் அதிரடிகளுடன் பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டாலும் குறுகிய காலத்தில் வேகமாக சரிவதை பல நிறுவனங்கள் பார்த்துள்ளோம். இதனால் எந்தொரு நிறுவனத்தின் ஐபிஓ-வில் முதலீடு செய்தாலும் முன்பும், பின்பும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும்.
அர்பன் கம்பெனியின் ஐபிஓ-வுக்கு சுமார் 103 மடங்கு மேல் முதலீட்டுக்கான முன்பதிவை முதலீட்டாளர்கள் செய்தனர். தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIBs) பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை தாண்டி முதலீட்டாளர்கள் 147 மடங்கு முதலீடு செய்தனர். இதேபோல் நிறுவனமற்ற முதலீட்டாளர்கள் 77 மடங்கு, மற்றும் ரீடைல் முதலீட்டாளர்கள் 41 மடங்கு முதலீட்டு விருப்பத்தை தெரிவித்தனர். இந்த பெரும் ஆர்வம் தான் இன்று 57.5% பிரீமியம் விலையுடன் சுமார் ரூ.162.25-இல் பட்டியலிடப்பட்டது.
2014ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அர்பன் கம்பெனி முதலில் அர்பன் கிளாப் என்ற பெயரில் தான் அறிமுகமானது. இந்தியாவில் வீட்டு-க்கும் தேவையான பணிகளை செய்ய திறன்வாய்ந்த ஊழியர்களை இணைக்கும் பணியை தான் அர்பன் கம்பெனி செய்கிறது.
உதாரணமாக உங்க வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமெனில் இந்த அர்பன் கம்பெனியை அணுகினால் போதும், இந்த பணிகளை செய்யம் திறன்வாய்ந்த ஊழியர்களை நம்முடை வீட்டுக்கு சகல உபகரணங்கள் உடன் அனுப்பி வைப்பார்கள். இது பெரும் நகரங்களில் திறன்வாய்ந்த ஊழியர்களை தேடி பிடிப்பது மிகவும் சவாலான காரியம் என்பதால் இத்தகைய சேவைக்கு நாட்டின் பெருநகரங்களில் பெரிய அளவில் டிமாண்ட் இருந்தது.
தற்போது இதில் அழகு மற்றும் ஆரோக்கிய சேவைகள், உபகரண பழுதுபார்ப்பு, சுத்தம் செய்வது, மற்றும் வீட்டு பராமரிப்பு உள்ளிட்ட பலவகையான சேவைகளை வழங்குகிறது அர்பன் கம்பெனி. முதலில் பெரு நகரங்களை மட்டும் குறிவைத்து துவங்கப்பட்ட அர்பன் கம்பெனி தற்போது இந்தியாவின் 47 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
இது மட்டும் அல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் விரிவடைந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பல Unorganized பிரிவில் இதுவும் ஒன்று, தற்போது பெரும்பலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் Unorganized துறையை organized துறையாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
அர்பன் கம்பெனி நிதி ரீதியாக பார்க்கும் போது 2025 நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 38% உயர்ந்து ரூ.1,144.5 கோடியாக உயர்ந்தது, இது 2024 நிதியாண்டில் ரூ.830 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அர்பன் கம்பெனி, 2030 நிதியாண்டுக்குள் இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications