அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவுகள் எப்போதும் முதலீட்டு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷல். இந்திய பங்குச்சந்தையில் இருந்து தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் வேளையிலும், ரூபாய் மதிப்பு குறைந்து வரும் வேளையிலும், தொடர்ந்து 3வது முறையாக ஜெரோம் பவல் தலைமையிலான அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
இன்று முதலீட்டு சந்தையை பார்க்கும் போது என்னவெல்லாம் கணித்தோமோ அவை அனைத்தும் அடுத்தடுத்து நடந்து வருகிறது. தங்கம் முதல் ரூபாய் மதிப்பு வரையில் அனைத்தும் இந்திய முதலீட்டாளர்களுக்கு சாதகமாக மாறி வருகிறது என்றால் மிகையில்லை.

எம்சிஎக்ஸ் சந்தை
டிசம்பர் 11, 2025 வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் இந்தியாவின் MCX-யில் தங்கம் 0.60 சதவீதம் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,30,575 ஆகவும், வெள்ளி 2.42 சதவீதம் உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ.1,93,300 ஆகவும் வர்த்தகமானது. எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளியின் அதிகபட்ச விலை ரூ.1,93,452 ஆகும்.
சர்வதேச ஸ்பாட் சந்தை விலை
சர்வதேச சந்தையிலும் தங்கம் 1 சதவீதம் உயர்ந்து அவுன்ஸுக்கு 4,271.30 டாலராகவும், வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத புதிய உச்சமான 61.48 டாலராகவும் உயர்ந்தது. இதைவிட முக்கியமாக டாலர் இன்டெக்ஸ் 0.25 சதவீதம் சரிந்ததுள்ளது.
இந்திய ரீடைல் சந்தை விலை
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 1,20,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 1,31,460 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 176 ரூபாய் உயர்ந்து 1,05,168 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாயும், கிலோவுக்கு 2000 ரூபாயும் உயர்ந்து 2,09,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 640 ரூபாய் உயர்ந்து 48,290 ரூபாயாக உள்ளது.
இந்திய பங்குச்சந்தை
இன்று காலை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் மந்தமாக துவங்கினாலும் சில நிமிடங்களில் வர்த்தகம் மீண்டுள்ளது. இதன் காரணமாக சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்ந்து 84,519 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 56 புள்ளிகள் உயர்ந்து 25,815.30 புள்ளிகளை அடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இன்று (டிசம்பர் 11, 2025 நிலவரப்படி) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தோராயமாக ரூ.90.11 முதல் ரூ.90.26 வரையில் வர்த்தகமாகிறது. சர்வதேச சந்தையில், 1 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் 0.67 சதவீதம் சரிந்து 90.37 ஆக குறைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், உள்நாட்டு இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் சந்தை நிச்சயமற்ற தன்மை காரணமாக ரூபாய் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.90.37 ஆக இருந்து வருகிறது.
பெட் முடிவுகளின் தாக்கம்
இந்த ஏற்றம் அனைத்தும், அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve டிசம்பர் 10ஆம் தேதி நடத்தி முடித்த நாணய கொள்கை கூட்டத்தில் மூன்றாவது முறையாக தொடர் வட்டி விகித குறைப்பால் ஏற்பட்டது. ஃபெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 3.50-3.75 சதவீதமாக மாற்றப்பட்டது. இதோடு சேர்த்து 2025இல் மொத்தம் 0.75 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு உள்ளது.
பிரச்சனை
தற்போது பிரச்சனை என்னவென்றால் ஃபெட் அதிகாரிகள் 2026இல் ஒரே ஒரு கூடுதல் வட்டி குறைப்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்று சிக்னல் அளித்துள்ளனர். ஆனால் CME ஃபெட்வாட்ச் கருவியின்படி, சந்தை இரண்டு குறைப்புகளுக்கு 77 சதவீத வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த வேறுபாடு, வங்கியின் கொள்கை திசையில் நிச்சயமின்மையை காட்டுகிறது.
இந்திய சந்தையில் தற்போது FII விற்பனை, IPO சப்ளை, கடைசி ஆறு காலாண்டுகளில் லாப வளர்ச்சி குறைவு ஆகியவை பங்குச் சந்தையை கடுமையாக பாதிக்கிறது. இந்த நிலையில் ஜியோஜிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சீஃப் இன்வெஸ்ட்மென்ட் ஸ்ட்ராடஜிஸ்ட் வி.கே.விஜயகுமார் கூறுகையில், ஃபெட் முடிவு சந்தைக்கு நல்லது என்றாலும், FII விற்பனை, அதிகப்படியான IPO, லாப வளர்ச்சி குறைவு காரணமாக பெரிய தாக்கம் இல்லை என்றார்.
மக்களுக்கு ஓரே தீர்வு
பெட் முடிவுகளுக்கு பின்பு இந்திய முதலீட்டு சந்தை கலவையான முதலீட்டு சூழ்நிலையை எதிர்கொள்ளும் காரணத்தால், ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வதை காட்டிலும், நிலையான லாபம், உறுதியான லாபம் தரும் சொத்துக்களை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
தங்கம், வெள்ளி ஆகியவை உச்சத்தில் இருக்கும் காரணத்தால் பெரிய தொகையை கொண்டு முதலீடு செய்யாமல் ETF வாயிலாக குறைந்த தொகையை கொண்டு முதலீடு செய்யும் போது, தங்கத்தில் கிடைக்கும் லாபம் அப்படியே கிடைக்கும்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications