இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை நீண்ட நாட்களுக்கு பின்பு வலிமையான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. இந்தியா - அமெரிக்க மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை முடிந்து டிரம்ப், மோடி மற்றும் இருநாட்டு தலைவர்களும் மாறி மாறி டிவீட் செய்து அதிரடி கிளப்பிய நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் தடாலடியாக உயர்ந்தன.
இந்த ஒப்பந்த மூலம் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு விதித்த வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்தது. இந்த விகிதம் வியட்நாம் மற்றும் வங்கதேசத்தின் 20 சதவீதத்தை விட குறைவு என்பதால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் நன்மை அடையும், அதேபோல் குறைந்த விலையில் பொருட்களை சப்ளை செய்ய முடியும் என்பதால் அதிக ஆர்டர் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.

இதனால் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்றுமதி சார்ந்த துறைகளில் சிறப்பான உயர்வை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதில் முக்கியமாக டெக்ஸ்டைல் துறை மற்றும் சிறப்பு உற்பத்தி நிறுவனங்கள் அதிரடியாக உயர்ந்து அப்பர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது.
இன்றைய வர்த்தரத்தில் பல பங்குகள் 20 சதவீத மேல் வரம்பை (upper circuit) தொட்டன. இதில் முக்கியமாக டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த KPR மில் (தமிழ்நாடு நிறுவனம் - இன்று அதிகப்படியாக 1030.80 ரூபாய் அளவில் வர்த்தகமாகியது), வெல்ஸ்பன் லிவிங், அப்பார் இண்டஸ்ட்ரீஸ், கோகுல்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ், அவலான் டெக்னாலஜீஸ், கார்வேர் ஹை-டெக், போகர்னா, யாஷோ இண்டஸ்ட்ரீஸ், இண்டோ கவுண்ட், கேம்லின் ஃபைன் சயின்சஸ், கிடெக்ஸ் கார்மென்ட்ஸ், கோல்டியம், ஜிஎன்ஏ ஆக்ஸில்ஸ், பேர்ல் குளோபல், அபெக்ஸ் ஃப்ரோசன் ஃபுட்ஸ் உள்ளிட்ட பங்குகள் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு டெக்ஸ்டைல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவை தாண்டி மிகவும் முக்கியமானது வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகியவை. தற்போது அமெரிக்கா அறிவித்துள்ள 18 சதவீத வரி என்பது இரு நாடுகளை காட்டிலும் குறைவானது என்பதால் இந்திய டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பெரிய அளவில் பலன் அடையும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் போது வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளது. இது பாகிஸ்தானின் 19 சதவீதத்தை விட குறைவு. கடந்த ஆண்டு ரஷ்ய எண்ணெய் வாங்கியதால் விதிக்கப்பட்ட 25 சதவீத வரி மற்றும் 50 சதவீத உச்ச வரி ஆகியவை இப்போது பெரிதும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த வரி குறைப்பு டெக்ஸ்டைல், ஆடை, ரத்தினம் மற்றும் நகை, எஃகு, கெமிக்கல், இன்ஜினியரிங் பொருட்கள் உள்ளிட்ட துறைகளுக்கு பெரும் நன்மை அளிக்கும். இந்திய ஏற்றுமதியாளர்களின் அமெரிக்க சந்தையில் வர்த்தகம் செய்வது மேம்படும்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications