அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வர உள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் கத்தி முனையில் நிற்கின்றன. நாட்டின் முக்கிய ஏற்றுமதி துறைகளை உலுக்கி பங்குச் சந்தையை பெரிய கொந்தளிப்பில் தள்ளக்கூடிய பரஸ்பர வரிகளின் தாக்கத்துக்கு தயாராக உள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்பார்த்ததை விட குறைவான வரி விதிப்பை அறிவித்தால், மருந்து மற்றும் ஐடி உள்ளிட்ட ஏற்றுமதி சார்ந்த துறைகளால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீட்சியை சந்திக்கக் கூடும். அதேசமயம் கடுமையான வரி விதிப்புகள் இருந்தால் அது பங்குச் சந்தை சரிவை மேலும் அதிகரிக்கக்கூடும்.

பரஸ்பர வரி விதிப்பால் எலக்ட்ரானிக்ஸ், நகைகள், மருந்து, வாகனம் மற்றும் ஜவுளி ஆகிய 5 துறைகளை சேர்ந்த பங்குகள் கடுமையான பாதிக்கப்பட உள்ள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எலக்ட்ரானிக்ஸ்: 2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவுக்கு 1,110 கோடி டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டுக்கான நம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 14 சதவீதமாகும். இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் 32 சதவீத பங்களிப்பை அமெரிக்கா கொண்டுள்ளது. 9 சதவீத துறைசார் வரி வேறுபாடு இந்த துறையை கடுமையாக பாதிக்கலாம்.
அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதியும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை மொபைல் போன்கள். இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஐபோன்களுக்கு அமெரிக்கா கடுமையாக வரி விதித்தால், ஆப்பிள் மற்றும் பிற உற்பத்தியாளர்கள் தங்கள் இந்திய உற்பத்தி உத்திகளை மறபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நவரத்தின கற்கள் மற்றும் நகைகள்: சர்வதேச அளவில் இந்தியா முன்னணியில் இருக்கும் ஒரு துறை நவரத்தின கற்கள் மற்றும் நகைகள். இத்துறையில் இந்தியா ஆண்டுக்கு 3,300 டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் சுமார் 3ல் ஒரு பங்கு அமெரிக்காவுக்கு செல்கிறது. அதாவது அமெரிக்காவுக்கு ரூ. 990 கோடி டாலர் மதிப்பிலான நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் நம் நாடு ஏற்றுமதி செய்கிறது.
இந்தி பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால் அது இந்தியாவின் ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கும், ஏனெனில் இந்த தயாரிப்புகளில் பலவற்றிக்கான மூலப்பொருளை குறைந்த வரிகள்/எஃப்டிஏக்கள் உள்ள பிற நாடுகளுக்கு மாற்றுவது எளிது. இந்திய உற்பத்தியாளர்கள் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனுக்கு இடம் பெயரக்கூடும். ஏற்றுமதி குறைந்தால் இந்த துறையில் வேலைவாய்ப்புக்கு மிகவும் தீங்காக அமையும்.
மருந்து: அமெரிக்காவின் ஜெனரிக் மருந்து இறக்குமதியில் நம் நாட்டின் பங்களிப்பு 47 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நம் நாட்டின ஜெனரிக் மருந்து தயாரிப்புகள் குறைந்த விலையை பிரதிபலிக்கிறது இது அமெரிக்காவுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. எனவே இந்திய மருந்துகள் மீதான வரியை மாற்றுவது கடினம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு சுமார் 35 சதவீதம் வரி விதிப்பது மிகவும் மோசமான சூழ்நிலை. அமெரிக்க உற்பத்தியின் பொருளாதார சாத்தியமின்மை மற்றும் வெற்றிகரமான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜெனரிக் மருந்துகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாமல் போகலாம். ஏப்ரல் 2ம் தேதி இந்தியா மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் மருந்து மீதான வரி குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் இருக்கலாம்.
தற்போதைய எதிர்பார்ப்புகளை பொறுத்தவரை, இந்திய மருந்துகளுக்கு 10 சதவீதத்துக்கும் குறைவான வரி விதிப்பு இந்திய மருந்து பங்குகளில் நேர்மறையான எதிர்வினையை தூண்டும். அதேசமயம் 10 சதவீதத்தக்கு மேல் வரி விதித்தால் அது பங்குகளில் மேலும் சரிவை ஏற்படுத்தக்கூடும். அதேசமயம் பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் வரி சுமையை அமெரிக்க வாங்குபவர்களின் தலையில் சுமத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளன என்று நொமுரா தெரிவித்துள்ளது.
வாகனம்: இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய சந்தையாக இல்லை இதனால் ஓஇஎம்-களில் நேரடி தாக்கம் குறைவாக இருக்கலாம். இருப்பினும் ஜாகுவார் லேண்ட் ரோவர் காரணமாக டாடா மோட்டார்ஸ் வரி விதிப்பு தாக்கத்தை எதிர்கொள்ளும். இந்நிறுவனத்தின் விற்பனையில் அமெரிக்காவின் பங்கு 30 சதவீதமாக உள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி ஆலை இல்லாததால் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அதிக வரி விதிப்புக்கு உட்பட்டதாக இருக்கும் இது இந்நிறுவனத்தின் லாபத்தை பாதிக்கும். அதேசமயம் வாகன உதிரிபாங்கள் தயாரிப்பாளர்கள் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
கடந்த நிதியாண்டில் இந்தியாவின் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு 27 சதவீதமாக இருந்தது. சோனா காம்ஸ்டார், சம்வர்தனா மதர்சன் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளன. இருப்பினும் பெரும்பாலான இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் பன்முகப்படுத்தப்பட்ட அதாவது பல்வேறு நாடுகளை ஏற்றுமதி தளங்களாக கொண்டுள்ளன இது ஒட்டு மொத்த தாக்கத்தை குறைக்கக்கூடும்.
ஜவுளி: கடந்த நிதியாண்டில் நம் நாடு 960 கோடி டாலர் மதிபபிலான ஐவுளி மற்றும் ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து இருந்தது. இது இத்துறையின் மொத்த ஏற்றுமதியில் 28 சதவீதமாகும். பரஸ்பர வரியால் இந்திய ஜவுளிகளின் விலை உயர்ந்தால், அது நமக்கு பாதகமாகவும் நமது போட்டி நாடுகளான வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்றவற்றுக்கு சாதகமாகவும் அமைந்து விடும். பரந்த துறை மட்டத்தில் பரஸ்பர வரிகள் விதிக்கப்பட்டால் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகள் மிக மோசமான பாதிப்புகளில் ஒன்றாக இருக்கும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications