அமெரிக்கப் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஒரு பெரிய உயர்வு கண்டது, திங்கட்கிழமை பதிவான சரிவுக்குப் பின் பதிவான இந்த உயர்வு உண்மையிலேயே முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக பதற்றங்கள் விரைவில் குறையலாம் என்ற தகவல் வெளியானது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கு.
அமெரிக்கப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஏவரேஜ் (Dow Jones Industrial Average) 670 புள்ளிகள் உயர்ந்து, 1.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதேபோல, எஸ் அண்ட் பி 500 (S&P 500) 1.6 சதவீதமும், நாஸ்டாக் காம்போசிட் (Nasdaq Composite) 1.9 சதவீதமும் உயர்ந்தன. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டவ் ஜோன்ஸ் குறியீடு ஒரு கட்டத்தில் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து கவனிக்க வேண்டியது.

அமெரிக்கப் பங்குச் சந்தையின் இந்த திடீர் பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கிய காரணம், அமெரிக்கக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) ஜேபி மோர்கன் சேஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஒரு முதலீட்டாளர்கள் குழுவிடம் பேசும்போது சொன்ன ஒரு அறிவிப்பு தான்.
ஸ்காட் பெசென்ட் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் (Trade War) விரைவில் தணிய வாய்ப்புள்ளது என்றும் விரைவில் வர்த்தக போர் முடிவுக்கு வரும் (De-escalation) என்று கூறியிருக்கிறார். இந்த செய்தி, முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்ததை தொடர்ந்து தங்கம் பத்திர சந்தையில் இருந்த முதலீடுகள் அனைத்தும் மீண்டும் பங்குகளை வாங்குவதற்காகப் பங்குச்சந்தைக்குத் திரும்பியுள்ளது.
ஆனா, ஸ்காட் பெசென்ட் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார். "தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை எப்போது முடியும், யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியவில்லை. ஒருவேளையில் இந்த பேச்சுவார்த்தையில் இருந்து அமெரிக்கா வெளியேறி, இரண்டு அல்லது 3 வருஷத்துல ஒரு ஒப்பந்தத்தைக் கையெழுத்து செய்தாலும், அது பெரிய வெற்றியாகவே இருக்கும்," என்று அவர் சொன்னார்.
இதன் மூலம் வர்த்தக பதற்றங்கள் உடனடியாக முடிவுக்கு வராது, ஆனா படிப்படியாகக் குறைய வாய்ப்பிருக்கும் என்பது உறுதியாகியிருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு பாசிடிவான ஒரு சிக்னல் வந்துள்ளது. இதனாலேயே வர்த்தக துவக்கத்தில் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தாலும், பின்னர் குறைந்து நிலைபெற்றன.
இந்த செய்தியால், சீனாவுடன் நேரடி வர்த்தக தொடர்பு உள்ள நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன. உதாரணமாக, தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான என்விடியா (Nvidia) 1 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டெஸ்லா (Tesla) 4 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது.
இந்த நிறுவனங்கள், சீனாவில் தங்களோட உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளை பெருமளவு வைத்துள்ளது. அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தக பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை இந்த நிறுவனப் பங்குகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்களுக்கு இதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?
அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடக்கும் இந்த மாற்றங்கள், இந்திய முதலீட்டாளர்களுக்கும் முக்கியமானவை. உலகளாவிய பொருளாதாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் என்பதால் இவர்களுக்கு மத்தியில் இருக்கும் வர்த்தக பதற்றம் குறைந்தால், உலக சந்தைகளில் ஒரு நிலையான வளர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கும். இது, இந்தியாவின் பங்குச் சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதேவேளையில் கடந்த சில நாட்களாக அமெரிக்கப் பங்குச்சந்தை குறைந்தாலும் இந்திய பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்கா இந்தியாவுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேபோல் அமெரிக்கா இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தை துவங்கிய உடன், அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.
இவை அனைத்தையும் விட முக்கியமாக அமெரிக்கா சீனா மீது வைத்திருக்கும் நிலைப்பாட்டைத் தான் வியட்நாம் மீதும் வைத்திருக்கும் காரணத்தால், வியட்நாம் நாட்டில் உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு இடம்பெயரத் திட்டமிட்டு வருகிறது.
இதில் முதல் படியாக ஆப்பிள் மற்றும் கூகுள் தனது வியட்நாம் ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா விதித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு தான். இந்தியா மீது 26 சதவீதம் வரி விதித்த அமெரிக்க வியட்நாம் மீது 46 சதவீத வரியை விதித்துள்ளது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications