கேப்பில் கெடா வெட்டும் அமெரிக்க முதலீட்டாளர்கள்.. யூடர்ன் அடித்த பங்குச்சந்தை!

அமெரிக்கப் பங்குச்சந்தை வியாழக்கிழமை மிகவும் மோசமான சரிவைக் கண்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயர்வுடன் துவங்கி மீண்டும் நம்பிக்கை வரவைத்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நேற்றைய மோசமான சரிவை Buy on Dip வாய்ப்பாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இதனால் நாஸ்டாக் குறியீடு நேற்றைய சரிவுக்குப் பின்பு இன்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்றைய வர்த்தகத்தில் ஏஐ, சிப், கிளவுட் சேவை, டேட்டா சென்டர் நிறுவனங்கள் என ஏஐ தொடர்புடைய அனைத்து பங்குகளும் கடுமையாகச் சரிந்தது.

கேப்பில் கெடா வெட்டும் அமெரிக்க முதலீட்டாளர்கள்.. யூடர்ன் அடித்த பங்குச்சந்தை!

இதைத் தொடர்ந்து எப்போதும் குறையாத இந்த ஏஐ பங்குகளை நேற்றைய வர்த்தகத்தில் விலை குறைந்தது மூலம் முதலீட்டாளர்கள் மீண்டும் வாங்கத் தொடங்கினர். இதனால், சரிவில் தத்தளித்த நிலையில் நாஸ்டாக் மீண்டும் உயர்ந்தது.

குறிப்பாக டெக் நிறுவனப் பங்குகளை அதிகம் கொண்டுள்ள நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 1.8% உயர்ந்தது. அதேபோல், S&P 500 குறியீடு 1% ஏற்றம் கண்டது. ஆனால், டவ் ஜோன்ஸ் குறியீடு பெரிய மாற்றமின்றி 100 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நேற்றைய வர்த்தகத்தில் 17 சதவீதம் வரையில் சரிந்த மைக்ரான் டெக்னாலஜிஸ் இன்று 5 சதவீதம் உயர்ந்துள்ளது, இதேபோல் என்விடியா 9 சதவீத சரிவில் இருந்து இன்று 4 சதவீத உயர்வுக்குத் திரும்பியுள்ளது.

மேலும் Magnificent Seven என அழைக்கப்படும் 7 முக்கிய டெக் நிறுவனங்கள் நேற்றைய 2.8 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு சரிவில் 1 டிரில்லியன் டாலர் பங்கீட்டைக் கொண்டு உள்ளது.

ஆனால் இன்றைய வர்த்தகத்தில் என்விடியா, டெஸ்லா, மெட்டா, ஆல்பபெட் ஆகியவை வெள்ளிக்கிழமை சரிந்துள்ளது. மேலும் டாய்ச் வங்கி சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவைப் பயன்படுத்தி ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை வாங்க அறிவுறுத்திய நிலையில் முதலீட்டாளர்கள் அலைகடலெனத் திரண்டு முதலீடு செய்தது மூலம் இன்று 6 சதவீதம் உயர்ந்துள்ளது, நேற்று 13 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சிப் பங்குகளான ஏஎம்டி, இன்டெல், குவால்கம், மார்வெல், பிராட்காம் என அனைத்தும் நேற்றைய சரிவில் இருந்து பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 வருடத்திற்குப் பின்பு மீண்டும் ஆதிக்கம் பெற்ற ஜனநாயக கட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டின் தடை விதிக்கப்படலாம் அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் முதலீட்டுச் சந்தையில் அதிகரித்த காரணத்தால் நேற்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏஐ, டேட்டா சென்டர், கிளவுட் சேவைகள், நியோ கிளவுட், சிப் தயாரிப்பு, சிப் டிசைன் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இதன் வாயிலாக அமெரிக்கா சந்தையின் தாக்கம் இன்று தென் கொரிய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. காஸ்பி குறியீடு 8 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், பெரும் சரிவை தடுக்க சர்கியூட் பிரேக்கர் டிரிக்கர் ஆனது. தைவான் நாட்டின் டாய்எக்ஸ் இன்று 8 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்து 37,837 புள்ளிகள் வரையில் சரிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+