ரிசர்வ் வங்கி ஆக்ஷன் மோட் வேலை செய்யுது.. ஒரே நாளில் 1% உயர்ந்த ரூபாய் மதிப்பு..!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியதுமே எதிர்பார்த்தபடி அதிரடியாக உயர்ந்துள்ளது, 96.73 வரையில் சரிந்திருந்த இந்திய ரூபாய் மதிப்பு இன்று 1 சதவீதம் அதிகரித்து 95.76 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடியான உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணம் ஆர்பிஐ அறிவித்த 2 முக்கிய நடவடிக்கைகள் தான்.

ரூபாய் மதிப்பில் அதிகப்படியான சரிவு ஏற்பட மிக முக்கியமான காரணம் ரீடைல் சந்தை அல்லது ஓப்பன் மார்கெட்டில் நிலவும் அதிகப்படியான டாலர் நாணயத்திற்கான டிமாண்ட் தான். இந்த சப்ளை -டிமாண்ட் பிரச்சனை காரணமாகவே ரூபாய் மதிப்பு வேகமாகச் சரிந்து வருகிறது, இதைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ டாலர் விண்டோ என்ற புதிய முறையைக் கொண்டு வந்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆக்ஷன் மோட் வேலை செய்யுது.. ஒரே நாளில் 1% உயர்ந்த ரூபாய் மதிப்பு..!

இந்த டாலர் விண்டோ மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் இறக்குமதிக்குத் தேவையான டாலரை ஆர்பிஐ தனது சொந்த அன்னிய செலாவணி இருப்பில் இருந்து கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதன் வாயிலாக ஓப்பன் மார்கெட்டில் இருக்கும் அதிகப்படியான டிமாண்ட் குறையும், மேலும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவும் கட்டுப்படுத்தப்படும்.

Also Read

அடுத்தாக ரூபாய்க்கு எதிரான ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் டெரவேட்டிவ் முதலீட்டைப் பெற வங்கிகளுக்குக் கூடுதல் தொகையை டெபாசிட் செய்ய ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது, இதனால் ரூபாய் மதிப்புக்கு எதிராக வைக்கப்படும் பெட்டிங் குறையும். இதன் வாயிலாகவும் ரூபாய் மதிப்பின் சரிவைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விரு அறிவிப்புகளையும் ஆர்பிஐ சனிக்கிழமை தெரிவித்த நிலையில் எதிர்பார்த்தபடியே திங்கட்கிழமை நாணய சந்தையில் இது எதிரொலித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கை மூலம் ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், நிரந்தரமாகத் தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. இதற்கு முன்பு ஆர்பிஐ - மத்திய அரசு - வங்கிகள் இணைந்து FCNR-B வைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் உடன் அன்னிய செலாவணி முதலீட்டுக்கு வட்டி வருமானம் கொடுப்பதாகக் கூறி பெரும் முதலீட்டைத் திரட்டியது.

Recommended For You

இந்த முதலீடு மூலம் ரெப்போ விகிதம் குறைத்து இப்பணத்தை நாட்டின் வர்த்தகம், பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவின் வட்டி விகித உயர்வைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஆர்பிஐ தனது அன்னிய செலாவணியைக் கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது புதிய அன்னிய முதலீட்டை ஈர்க்கவும், இருக்கும் அன்னிய முதலீட்டைத் தக்க வைத்துக்கொள்ளவும் கட்டாயம் புதிய தளத்தையும், ஏஐ போன்ற ஒரு துறையை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாக புதிய முதலீட்டை எளிதாக ஈர்க்க முடியும், பங்குச்சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகளும் தொடர்ந்து வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+