அதிகம் அறிமுகம் இல்லாத யூஐ பின்கார்ப் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். மும்பை பங்குச்சந்தையில் ஆச்சரியம் அளிக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு ஈட்டித் தந்துள்ளது. கடந்த 40 மாதங்களில் இந்த நிறுவனத்தின் பங்கு 2100 மடங்கு அதிகரித்துள்ளன. இதில் முதலீடு செய்தவர்களுக்கு பெருத்த லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
கடந்த வாரத்தின் தொடக்கத்தில் ANS Developers Private Limited (ADPL)இல் உள்ள தனது நிறுவன ஈக்குவிட்டி பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டதாக அறிவித்தது. ANS Developers Private Limited (ADPL)இல் 14.13 சதவீத பங்குகள் அல்லது 32 லட்சம் பங்குகளை வைத்திருந்தது.

இந்த பங்குகளை கோல்டன் கோயங்கா கிரெடிட் பிரைவேட் லிமிடெட்டுக்கு பங்கு விற்பனை அக்ரிமென்ட் மூலமாக விற்றது.
ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டட் அல்லது செபியின் அங்கீகாரம் பெற்ற மெர்ச்சனட் புரோக்கர் தரும் வேல்யூவேஷன் சான்றிதழ் மூலம் ஏடிபிஎல்லின் பங்குகள் அனைத்தையும் கோல்டன் கோயங்கா கிரெடிட் லிமிடெட் நிறுவனத்துக்கு விற்பதற்கு யூஒய் பின்கார்ப் ஒப்புக்கொண்டது.
இந்த மதிப்பீடு ஏடிபிஎல்லின் 2023 மார்ச் 31ஆம் தேதி பைனான்சியல் ஸ்டேட்மென்ட் அடிப்படையில் செய்யப்பட்டது. முந்தைய வேல்யூவேஷன்கள் படி ஏடிபிஎல் பங்கு தலா ரூ.253.88 ஆகும். மொத்த பங்குகளின் விலை 81.24 கோடி ரூபாயாகும். கடந்த 2 ஆண்டுகளில் நிறுவனத்தின் முதலீடு 10 முறை அதிகரித்தது.
யூஒய் பின்கார்ப் பங்கு விலை ரூ.29ஐ வெள்ளிக்கிழமை எட்டியது. இதன் மொத்த மார்க்கெட் மூலதனம் ரூ.525 கோடி. 2020 ஏப்ரலில் இந்த பங்கு விலை ரூ.1.3க்கு விற்பனையானது. அதிலிருந்து 2100 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 52 வாரங்கள் குறைவாக இருந்தாலும் 160 சதவீத வரவை நிறுவனம் தந்துள்ளது.
யூஒய் பின்கார்ப் வருமானத்தை புதிய வாய்ப்புகள் மற்றும் தனது நிதி நிலைமையை பலப்படுத்துவதற்காக பயன்படுத்த நினைக்கிறது. இதன்மூலம் கூடுதல் நிதி ஸ்திரத்தன்மை உருவாகும். யூஒய் தனது மூல வியாபார நடவடிக்கைகளை கடன் வழங்குதல் மற்றும் பைனான்ஸ் சர்வீஸில் ஈடுபடுத்தி வருவாய் மற்றும் லாபத்தை பிரைமரி பிஸினஸ்ஸில் எட்ட திட்டமிட்டுள்ளது.
கார்ப்பரேட் லோன்கள், பர்சனல் லோன்கள் செக்யூரிட்டிகளில் முதலீடு மற்றும் செக்யூரிட்டி டிரேடிங்கில் முக்கிய கவனத்தை செலுத்துகிறது. தங்களது பங்குதாரர்களுக்கு பலதரப்பட்ட போர்ட்போலியோ முதலீடுகள் மற்றும் குறிப்பிட்ட முதலீட்டு நடவடிக்கைகள் ஈடுபட வாய்ப்பளிக்க நினைக்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications