பங்குச் சந்தையில் பொதுவாக நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல ஆதாயத்தை பெற முடியும். ஒரு முதலீட்டாளர் நல்ல பங்கினை தேர்வு செய்து அதில் முதலீடு செய்து விட்டு பொறுமையாக இருந்தால், பல ஆண்டுகள் கழித்து அந்த பங்கு அவருக்கு மல்டிபேக்கர் வருமானத்தை உறுதியாக கொடுக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக வடிலால் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கினை சொல்லலாம். கடந்த 21 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 738 மடங்குக்கு மேல் பெருக்கியுள்ளது.
வடிலால் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. குஜராத்தை சேர்ந்த இந்நிறுவனம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வடிலால் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். பிஎஸ்இ தரவுகளின்படி, இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் நிகர லாபமாக சுமார் ரூ.96 கோடி ஈட்டியுள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.913 கோடி ஈட்டியுள்ளது.

2024 டிசம்பர் காலாண்டில் வடிலால் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த அடிப்படையிலான நிகர லாபம் 29 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.11.93 கோடியாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 17 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.204 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் (2024 ஏப்ரல்-டிசம்பர்) வடிலால் இண்டஸ்ட்ரீஸின் நிகர லாபம் 8.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.128 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 10 சதவீதம் அதிகரித்து ரூ.963 கோடியாக பெருகியுள்ளது.
இ்ந்நிறுவன செயல்பாடுகளில் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் சம்பாதித்து கொடுக்கிறதோ, அதேபோல், இந்நிறுவன பங்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைத்துள்ளது.
உதாரணமாக கடந்த 21 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 73,686 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.5.60லிருந்து ரூ.4,132ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்த காலத்தில் வடிலால் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 738 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
21 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வடிலால் இண்டஸ்ட்ரீஸ் பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.7.37 கோடியாக உயர்ந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 479.76 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது இந்த ஆண்டுகளில் இப்பங்கின் விலை ரூ.721.85லிருந்து ரூ.4,132ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 16.49 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இந்நிறுவன பங்கின் விலை 3.68 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.4,470வரை சென்றது.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications