இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான வேதாந்தா நிறுவனம், 2026 நிதியாண்டுக்கான இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.16 அறிவித்துள்ளது. மொத்தமாக இந்நிறுவனம் ஈவுத்தொகை எனப்படும் டிவிடெண்டாக மட்டும்ரூ.₹6,256 கோடியை வழங்க இருக்கிறது. இந்த ஈவுத்தொகைக்கான ரெக்கார்ட் தேதி 2025 ஆகஸ்ட் 27 புதன்கிழமை என அனில் அகர்வால் தலைமையிலான இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, ஜூன் 18 அன்று, வேதாந்தா தனது முதல் இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.7 அறிவித்திருந்தது. இதன் மூலம் ரூ.2,737 கோடி விநியோகிக்கப்பட்டது. அதிக ஈவுத்தொகை வழங்கும் பங்குகளில் வேதாந்தா முதலிடத்தில் உள்ளது. இதன் ஈவுத்தொகை வருவாய் 8% ஆகும். கடந்த 12 மாதங்களில் இந்நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.35.5 ஈவுத்தொகையாக வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பு சந்தை நேரம் முடிந்த பிறகு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று தேசிய பங்குச்சந்தையில் (NSE) வேதாந்தாவின் பங்குகள் ரூ.447.10-ல் முடிவடைந்தன. இது முந்தைய புதன்கிழமை விலையை விட ரூ.1.60 அல்லது 0.36% அதிகமாகும்.
முன்னதாக வேதாந்தா குழும நிறுவனங்களை பிரிக்கும் திட்டம் தொடர்பான வழக்கில், தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் (NCLT) செப்டம்பர் 17-க்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில், நிறுவனத்தின் மறுசீரமைப்பு தொடர்பான முக்கிய விவரங்களை மறைத்ததாக மத்திய அரசு கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது.
வேதாந்தாவின் கணக்குப் புத்தகங்களில் வருவாய் அதிகரிப்பு மற்றும் கடன்கள் குறைவாகக் காட்டப்பட்டதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பங்குச்சந்தைகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து முன்னரே ஒப்புதல் பெற்ற பிறகும், வேதாந்தா தனது பிரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்ததால், இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஏற்கனவே நிறுவனத்திற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது. இது ஒரு தீவிரமான மீறல் என செபி குறிப்பிட்டிருந்தது.
மற்றொரு பின்னடைவாக, பஞ்சாபில் உள்ள தனது தல்வாண்டி சாபோ மின் திட்டத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரி வேதாந்தா குழு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் வேதாந்தா குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாக கடந்த மாதம் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டது, ஆனால் வேதாந்தா குழுமம் அதனை மறுத்திருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வேதாந்தாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டை விட 11.7% குறைந்து ரூ.3,185 கோடியாக பதிவாகியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.3,606 கோடியாக இருந்தது. இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.75% அதிகரித்து ரூ.37,824 கோடியாக உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.35,764 கோடியாக இருந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications