வேதாந்தா குழுமம் (Vedanta Group) என்பது இந்தியாவில் இருந்து உலகளவில் செயல்படும் பெரிய இணைய தொழிற்சாலை மற்றும் வளத்துறையில் இயங்கும் ஒரு தொழில் குழுமம் ஆகும். இந்நிறுவனம் தாது உற்பத்தி, தங்கம், அலுமினியம், சிமெண்ட் போன்ற பல துறைகளில் பணியாற்றி வருகிறது. அனில் அகர்வால் என்பவருக்குச் சொந்தமான இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 4.5% வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் வைஸ்ராய் ரிசர்ச் (Viceroy Research) என்ற நிறுவனம் வெளியிட்ட ஒரு முக்கியமான அறிக்கை தான்.
அதாவது, வேதாந்தா குழுமம், இந்தியாவின் ஒரு பெரிய தொழில்துறை நிறுவனமாக இருந்தாலும், தற்போது நிதி சம்பந்தமான பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. நிறுவனம் கடன்களில் மூழ்கியுள்ளது. வங்கிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் கடுமையான நிதிச் சிரமத்தை சந்திக்கிறது. அந்த அறிக்கையில், இது ஒரு பான்சி திட்டம் (Ponzi Scheme) போல் இயங்குவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பான்சி திட்டம் என்பது முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து, பழைய முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டாளர்களின் பணத்திலேயே லாபம் வழங்கும் ஒரு மோசடி முறையாகும்.

ஜூலை 9, மதியம் 3 மணி நிலவரப்படி, வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை 3.45% குறைந்து, ஒரு பங்கு ரூ.440.75-க்கு விற்பனையானது. இன்றைய வர்த்தக நாளில், பங்குகள் அதிகபட்சமாக 7% வரை குறைந்துள்ளன. வேதாந்தா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் பங்குகள் 2.6% குறைந்து ரூ.425 ஆக விற்பனையானது. இதன் காரணமாக, நிப்டி மெட்டல் குறியீடு (Nifty Metal Index) 1.7% வீழ்ச்சியுடன் வர்த்தகம் செய்தது. இந்த குறியீட்டில், வேதாந்தா மற்றும் ஹிந்துஸ்தான் காப்பர் போன்ற நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்தன.
வேதாந்தா குழுமம் தனி நிறுவனங்களாக பிரிவதற்கான திட்டம் நடப்பில் இருக்கிறது. இந்த திட்டத்தை குழுமத் தலைவர் அனில் அகர்வால் தொடங்கினார். இதற்கான காரணம், 2020-ல் வேதாந்தா நிறுவனத்தை தனியாராக்க முயன்ற போது அது வெற்றியடையாததால், பின்னர் வணிகம் முழுமையாக மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழலில், தற்போது வெளியாகியுள்ள அறிக்கை, இந்த திட்டத்திற்கும், குழுமத்தின் நிதி நிலைத்தன்மைக்கும் கேள்விக்குறியாகியுள்ளது.
வேதாந்தா ரிசோர்ஸஸ் (Vedanta Resources) நிறுவனம், தங்கள் கடனை அடுத்த 3 ஆண்டுகளில் 3 பில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை அறிவித்தது. ஆனால் இத்திட்டம் பற்றிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில், வைஸ்ராய் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. வேதாந்தா ரிசோர்ஸஸ் லிமிடெட் என்பது ஒரு ஹோல்டிங் நிறுவனம். அதாவது இது நேரடியாக தொழில் செய்யாது. ஆனால், வேறொரு நிறுவனம் மூலம் பணம் சம்பாக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
வேதாந்தா ரிசோர்ஸஸிடம் தனியாக சம்பாதிக்கும் வருவாய் ஒன்றும் இல்லை. அது முழுமையாக வேதாந்தா லிமிடெட் என்ற நிறுவனத்தின் பணத்தில் நடத்தப்படுகிறது. வேதாந்தா லிமிடெட் நிறுவனம் தற்போது நிதி சிக்கலில் இருக்கும் நேரத்தில் கூட, அதன் பணத்தை வேதாந்தா ரிசோர்ஸஸ் வாங்கி செலவழிக்கிறது. இதனால், அது ஒரு "பராசைட்" (உடலிலிருக்கும் புழு போல, மற்றவரின் வளத்தையே உறிஞ்சும் ஒன்று) போல நடக்கிறது.
இதனால், பணம் சம்பாதிக்கும் நிறுவனம் (வேதாந்தா லிமிடெட்) பலவீனமடைகிறது. அந்த பணத்தை மற்றொரு நிறுவனம் எடுத்துக் கொள்கிறது. இரண்டுமே நிதிச் சீரிழந்து, கடனில் மூழ்கும் நிலை உருவாகிறது. இதைத்தான் வைஸ்ராய் ரிசர்ச் (Viceroy Research) நிறுவனம் "இது தனக்கு தானே அழிவை ஏற்படுத்தும் செயல்" என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆனால், வைஸ்ராய் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கைக்கு வேதாந்தா குழுமம், கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் தவறான தகவல்கள் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றும் கூறியுள்ளது. இது வேதாந்தா குழுமத்தின் மதிப்பை பாதிக்க திட்டமிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை. இந்த அறிக்கையை வெளியிடும் முன் எங்களை தொடர்புகொள்ள கூட அவர்கள் முயற்சிக்கவில்லை" என்று குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்த விவகாரம், முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை மற்றும் நிதி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2025 மார்ச் 31 நிலவரப்படி, வேதாந்தா ரிசோர்ஸ்ஸின் நிகர கடன் 4.9 பில்லியன் டாலர் என்று வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் நிதியாண்டில் இருந்து 3.6 பில்லியன் டாலர் (42%) வரை கடன் குறைத்தும், அதன் வட்டி விகிதம் 6.4% முதல் 15.8% வரை 145% உயர்ந்துள்ளது. VEDL (Vedanta Ltd) நிறுவனம் வேதாந்தா ரிசோர்ஸ்ஸின் நிதிச்சுமையை தாங்க முடியாத அளவுக்கு சுமந்து கொண்டிருக்கிறது என வைஸ்ராய் ரிசர்ச் குற்றம் சுமத்தியுள்ளது. இதனால், VEDL-ன் மூலதன அமைப்பே அழுத்தத்தில் உள்ளது. வட்டியில் காட்டப்படும் எண்கள் மற்றும் உண்மையில் செலுத்தப்படும் வட்டிகள் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகவும் வைகராய் கூறியுள்ளது.
வேதாந்தா குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் சில நேரங்களில் பொய்யான சொத்து விற்பனை தகவல்களை வெளியிட்டு, இடைக்கால நிதி திரட்ட முயன்றுள்ளார். மேலும், அலுவலக இயக்குநர்கள் மற்றும் சிறு பங்குதாரர்களைத் தவிர்த்து, VEDL-இல் இருந்து பணம் Vedanta Resources-க்கு அனுப்பும் முயற்சிகள் நடந்துள்ளன. மேலும், இந்த அறிக்கையில் கூறப்படும் தகவல்கள் வேதாந்தா குழுமத்தின் பலவீனமான அமைப்பை சீர்குலைக்கும் அளவுக்கு ஆபத்தானது என வைஸ்ராய் எச்சரித்துள்ளது.
வைஸ்ராய் ரிசர்ச், கடந்த காலங்களில் வையர்கார்ட் (Wirecard), ஸ்டைன்ஹோஃப் (Steinhoff) போன்ற பெரிய நிதி மோசடிகளை வெளிச்சம் போட்டு காட்டிய நிறுவனம் என்பதால், அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் முக்கியமாக கருதப்படுகின்றன. இதை வேதாந்தா குழுமம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications