லாபத்தை கொட்டி கொடுக்கும்.. இந்த 10 பங்குகள் உங்க போர்ட்ஃபோலியாவில் இருக்கா?

டிரம்பின் வரி கொள்கையால் இந்திய பங்குச் சந்தைகள் கடும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. டிரம்ப் வரி விதிப்பை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், சர்வதேச பங்குச் சந்தைகள் மெல்ல சரிவிலிருந்து மீள தொடங்கியுள்ளன. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இந்நிலையில், முதலீட்டுக்கு நம்பகமான மற்றும் நல்ல வளர்ச்சி காண வாய்ப்புள்ள 10 பங்குகளை தரகு நிறுவனமான வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ளது.

எச்டிஎஃப்சி வங்கி
எச்டிஎஃப்சி வங்கியின் இணைப்புக்கு பிறகு, வேண்டுமென்றே கடன் வழங்குவதில் மந்தநிலை மற்றும் டெபாசிட் திரட்டுவதை துரிதப்படுத்துகிறது. எச்டிஎஃப்சி வங்கி 2026-27ம் நிதியாண்டு முழுவதும் வலுவான நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மற்றும் டெபாசிட் வளர்ச்சியை கணித்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,866.05ஆக இருந்தது.

லாபத்தை கொட்டி கொடுக்கும்.. இந்த 10 பங்குகள் உங்க போர்ட்ஃபோலியாவில் இருக்கா?

ஃபினோ பேமென்ட்ஸ் வங்கி
ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் பரந்த நெட்வொர்க் காரணமாக 2026-27ம் நிதியாண்டில் வங்கியில் கணக்குகளின் எண்ணிக்கை 1.1 கோடியிலிருந்து 2.5 கோடியாக அதிகரிக்கும். ஃபினோ பேமென்ட்ஸ் வங்கியின் ஆண்டு சராசரி வருவாய், செயல்பாட்டு லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சி முறையே 28, 38 மற்றும் 34 சதவீதமாக இருக்கும் என்று தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.250.50ஆக இருந்தது.

பஜாஜ் ஃபைனான்ஸ்
கடந்த பத்தாண்டுகளில் பஜாஜ் பைனான்ஸின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஆண்டுக்கு 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இனியும் ஆண்டுதோறும் 25 சதவீதம் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயன்படுத்திய கார் கடன்களில் சில அழுத்தங்கள் இருந்தபோதிலும், அதன் தொழில்நுட்பம் சார்ந்த இடர் மேலாண்மை அந்நிறுவனத்துக்கு ஒரு முக்கிய பலமாகும் என்று வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.9,134.20ஆக இருந்தது.

அதானி பவர்
அதானி பவர் நிறுவனம் 2030-31ம் நிதியாண்டுக்குள் 30.67 ஜிகா வாட் திறனை நிறுவ இலக்காக கொண்டுள்ளது. 2026-27ம் நிதியாண்டு வரை இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் ஆண்டுக்கு 10 முதல் 12 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என்று வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.541.80ஆக இருந்தது.

டிரெண்ட்
டிரெண்ட் நிறுவனம் 2022-23 முதல் 2024-25ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் விற்பனையில் ஆண்டுக்கு சராசரி 45 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அதேவேளையில், அழகு மற்றும் உள்ளாடை பிரிவுகளில் வர்த்தகத்தை விரிவுப்படுத்தியுள்ளது.வெஸ்ட்சைட் 238 கடைகள் மற்றும் ஜூடியோ 635 ஷோரூம்கள் உள்ளன என்று தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.4,891.00ஆக இருந்தது.

இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட்
2026-27ம் நிதியாண்டுக்குள் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு அடிப்படையில் ஆண்டுக்கு 11.4 சதவீதம் வளர்ச்சி காணும். இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.23,951 கோடியை எட்டும். இந்நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 23.3 சதவீதம் வளர்ச்சி காணும் என்று வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.178.70ஆக இருந்தது.

Krsnaa டயக்னாஸ்டிக்ஸ்
Krsnaa டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பிபிஎல் மாடலை வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் பாராட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட மூலதன செலவினம் மற்றும் வளர்ந்து வரும் நோயியல் பிரிவில் களம் போன்றவற்றால் 2026-27ம் நிதியாண்டுக்குள் இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 27.9 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,297 கோடியாக உயரும். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.795.45ஆக இருந்தது.

நிப்பான் லைஃப் இந்தியா ஏஎம்சி
எஸ்ஐபி மற்றும் ரீடெயில் அதிகரிப்பால் 2023-24 முதல் 2026-27ம் நிதியாண்டுகள் வரை நிப்பான் லைஃப் இந்தியா ஏஎம்சி நிறுவனத்தின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 28.8 சதவீதம் வளர்ச்சி காணும். நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 18 சதவீதம் வளர்ச்சி காணும், 2026-27ம் நிதியாண்டில் லாப விகிதம் 19.4 மடங்கு இருக்கும் என்றும் வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.580.30ஆக இருந்தது.

பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ்
பிஎன்ஜி நிறுவனத்தின் 92 சதவீத வருவாய் தங்க நகைகளிலிருந்து வருகிறது. 2025ம் நிதியாண்டுக்குள் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.10,156 கோடியை எட்டும். 12-15 கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வரம்பு அதிகரிக்கும் என்று வென்ச்சுரா செக்யூரிட்டீஸ் எதிர்பார்க்கிறது.மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.548.50ஆக இருந்தது.

என்பிசிசி இந்தியா
என்பிசிசி இந்தியாவின் ஆர்டர் புத்தகம் ரூ.1 லட்சம் கோடியை எட்டும். 2025 நிதியாண்டில் வருவாய், EBITDA மற்றும் நிகர லாபம் முறையே 13, 15 மற்றும் 18 சதவீதம் வளர்ச்சியடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.89.70ஆக இருந்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+