விபோர் ஸ்டீல் டியூப்ஸ் லிமிடெட் நிறுவனம் உயர்தர ஸ்டீல், டியூப்ஸ் மற்றும் பைப்புகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் விபோர் ஸ்டீல் டியூப்ஸ் நிறுவனமும் ஒன்று. ஐபிஓவில் கலக்கிய இந்நிறுவன பங்கு தற்போது அதன் ஐபிஓ விலையை காட்டிலும் குறைவாக உள்ளது. விபோர் ஸ்டீல் டியூப்ஸ் நிறுவனம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. ஒரு பங்கு ரூ.151 என்ற விலையில் ஐபிஓ நடைபெற்றது.
விபோர் ஸ்டீல் டியூப்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ அளவே ரூ.72 கோடிதான். ஆனால் இந்நிறுவனத்தின் வெளியீட்டு அளவை காட்டிலும் 320 மடங்கு அதிகமாக பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பம் செய்து இருந்தார்கள். இதனையடுத்து அதிகம் பங்கு வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட இரண்டாவது ஐபிஓ என்ற பெருமையை விபோர் ஸ்டீல் டியூப்ஸ் பெற்றது.இந்நிறுவன பங்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு இப்பங்கின் விலை இரு மடங்குக்கு மேல் உயர்ந்தது. 2024 ஏப்ரல் 4ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை இதுவரை இல்லாத உச்சமான ரூ.332.90ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.

ஐபிஓவில் கலக்கிய விபோர் ஸ்டீல் டியூப்ஸ் பங்கினை உள்நாட்டை சேர்ந்த மியூச்சுவல் பண்டுகளும் வைத்திருக்கவில்லை மேலும், இந்நிறுவனத்துக்கு எந்த பகுப்பாய்வு கவரேஜும் இல்லை. ஆனால் சில்லரை முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்கினை வாங்கி குவித்து வருகிறார்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.
இந்நிறுவன பங்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, இந்நிறுவனத்தில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 12 சதவீதமாக இருந்தது. இது 2024 டிசம்பர் இறுதியில் 17.9 சதவீதத்தை எட்டியது. மற்ற பங்குதாரர்களில் ஜிண்டால் பைப்ஸ் நிறுவனம் இந்நிறுவனத்தில் 1.32 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. டிசம்பர் காலாண்டு இறுதியில், இந்நிறுவனத்தில் புரோமோட்டர்ஸ் வசம் 73.48 சதவீத பங்குகள் உள்ளன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.125க்கு சென்றது. வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5.40 சதவீதம் குறைந்து ரூ.132.25ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை உச்ச விலையை காட்டிலும் 60 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் விபோர் ஸ்டீல் டியூப்ஸ் நிறுவனம் வருவாயாக ரூ.1,073 கோடியும், நிகர லாபமாக ரூ.18 கோடியும் ஈட்டியிருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Written by: subramanian
More From GoodReturns

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications