ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தில் நடந்த மோசடி. பங்குச் சந்தை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் புரோமோட்டர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர் நிறுவனத்தின் பெயரில் வாங்கி கடனில் பெரும் தொகையை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தியது அம்பலமானது. இதனால் இந்நிறுவன பங்கின் விலை பலத்த அடி வாங்கி வருகிறது.
இதனால் இந்நிறுவன பங்கில் முதலீடு செய்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில், ஜென்சோல் போன்ற பல நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளன, மோசடி நிறுவனங்களை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், ஒரு நிறுவனம் மோசடியில் ஈடுபடுகிறது என்பதை அந்த நிறுவனங்களின் சில நடவடிக்கைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று முதலீட்டாளர்களை பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான விஜய் கேடியா எச்சரிக்கை செய்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் கேடியா எக்ஸ் தளத்தில், இன்னும் பல ஜென்சோல்கள் அலமாரியில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. காலப்போக்கில் வெளியே வர காத்திருக்கின்றன. சரியான நேரத்தில் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புவோம். நிறுவனங்களை பற்றி எச்சரிக்கையாக இருப்பது புத்திசாலித்தனம். ஒரு நிறுவனம் மோசடியில் ஈடுபட போகிறது என்பதை அதன் 10 அறிகுறிகளை (நடவடிக்கைகள்) வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
1. ஒரு விஷயத்தை பெரிதாக பேசுதல் மற்றும் மிகையான வாக்குறுதி அளித்தல்.
2. செய்தி வெளியீடு, அதிவேக சமூக ஊடக இடுகைகள் மற்றும் தொடர்ச்சியான நேர்காணல்கள் மூலம் நிலையான ஊடக இருப்பை பராமரித்தல்
3. சிறிய முன்னேற்றங்களை கூட பெரிதாக காட்டுதல்
4. எதற்காக நிதி பயன்படுத்த போகிறோம் என்ற தெளிவு இல்லாமல் அடிக்கடி நிதி திரட்டுதல்.
5. கவனத்தை ஈர்ப்பதற்காக தொடர்பில்லாத வணிகங்களில் முதலீடு செய்வது
6. விஷயம் அல்லது உண்மையான பொருள் இல்லாமல் புதுமையாக காட்டுவதற்கு மிகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் (உதாரணமாக ஏஐ இயக்கப்படுதல், அடுத்த தலைமுறை)
7. நிறுவனத்தின் செயல்திறனுக்கு பொருந்தாத புரோமோட்டர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை
8. நிறுவனத்தின் புரோமோட்டர்கள் பங்குகளை அதிகளவில் அடமானம் வைத்து கடன் வாங்கியிருப்பது.
9. தலைமை நிதி அதிகாரி, தணிக்கையாளர்கள் சிஎக்ஸ்ஓக்கள் உள்ளிட்ட முக்கிய பணியாளர்கள் அடிக்கடி நிறுவனத்தை வெளியேறுவதை எதிர்கொள்ளுதல்.
10. அதிகப்படியான தொடர்புடைய நபருடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல்.
இந்த பட்டியலை தாண்டி இன்னும் ஆபத்தான நடவடிக்கைகள் இருக்கலாம் அசாதாரணமாக இருங்க ஜாக்கிரதையா இருங்க என்று பதிவு செய்து இருந்தார். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஜென்சோல் இன்ஜினியரிங் பங்கின் விலை 5 சதவீதம் குறைந்து ரூ.117.50க்கு சென்றது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications