இந்தியாவின் பிரபல முதலீட்டு ஜாம்பவானாக இருப்பவர் விஜய் கேடியா. பங்குச்சந்தையில் இவர் எந்த பங்கினை வாங்குகிறார், எங்க பங்கினை விற்கிறார் என்பதை இத்துறை சார்ந்த அனைவருமே உற்று கவனிப்பார்கள்.
விஜய் கேடியா முதலீடு செய்திருக்கும் மல்டி பேக்கர் பங்கு ஒரு ஆண்டிலேயே 1 லட்சம் ரூபாய் முதலீட்டை 2.95 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது சைபர் செக்யூரிட்டி துறை அதிக டிமாண்ட் கொண்ட ஒரு துறையாக இருந்த வருகிறது. இந்த துறை சார்ந்த இயங்கக்கூடிய நிறுவனங்கள் அதற்கு ஏற்றபடி வளர்ச்சியை பெற்ற வண்ணம் இருக்கின்றன. அப்படி இந்தியாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி பிரிவில் செயலாற்றி வரக்கூடிய ஒரு நிறுவனம் தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவிலான லாபத்தை ஈட்டி தந்துள்ளது.

டேக் இன்போசெக் (Tac Infosec) என்ற நிறுவனம் இந்தியாவில் சைபர் செக்யூரிட்டி பிரிவில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு நிறுவனமாகும். 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் எஸ்எம்ஈ நிறுவனமாக கடந்த ஆண்டு ஐபிஓ வெளியிட்டு பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தில் விஜய் கேடியா 14.6 சதவீத பங்குகளை தனக்கு சொந்தமானதாக வைத்திருக்கிறார். இந்த நிறுவன பங்கு ஓராண்டுக்குள்ளேயே முதலீட்டாளர்களுக்கு 195 சதவீத லாபத்தை ஈட்டி தந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி தான் டேக் இன்போசிக் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது முதலே இந்த நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து ஏற்றத்தில் தான் இருந்து வருகிறது. இந்த ஓராண்டு காலத்திலேயே தன்னை நம்பி முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் அவர்களின் முதலீட்டை மும்முடங்காக மாற்றி தந்திருக்கிறது இந்த நிறுவனம். டேக் இன்போசெக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜூன் 4ஆம் தேதி அன்று 1161 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது . இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 373 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 1858 கோடி ரூபாய் . இந்த நிறுவனத்தின் வருமானம் என பார்க்கும்போது 2024 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் 12 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது அதில் 6 கோடி ரூபாய் லாபம் ஆகும். இந்த நிறுவன பங்கில் 57% பிரமோட்டர்கள் வசமும் சில்லறை முதலீட்டாளர்கள் வசம் சுமார் 39 % பங்குகளும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் 3.6 சதவீத பங்குகளும் இருக்கின்றன.
உலகம் முழுவதுமே சைபர் செக்யூரிட்டி பிரிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது அதே போல பல்வேறு நாட்டு அரசுகளும் பல்வேறு நிறுவனங்களும் சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துகின்றன என்பதால் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கும் என பங்குச்சந்தை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிறுவனத்தின் அடிப்படை வலுவாக இருப்பதாலேயே விஜய் கேடியாவே இதில் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய் கேடியா இந்த நிறுவனத்தில் தன்னுடைய SMILE (Small in size and Medium in experience Large in aspiration and Extra-large in market opportunity) கொள்கை மூலமே முதலீடு செய்திருக்கிறார்.. அதாவது சிறிய அளவில் தொழில் தொடங்கியிருக்க கூடிய ஒரு நிறுவனம் ஆனால் அதன் சந்தை வாய்ப்பு மிகப் பெரிய அளவில் இருக்கிறது என்ற என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இவர் முதலீட்டு முடிவுகளை எடுப்பார். தற்போது விஜய் கேடியா வசம் 1438 கோடி ரூபாய் மதிப்புடைய போர்ட்போலியோ இருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!



Click it and Unblock the Notifications