நம்ம விஜய் கேடியா இந்த பங்குகளில் தான் அதிக லாபம் பார்க்கிறார் - உங்ககிட்ட இந்த பங்குகள் இருக்கா?

பங்குச்சந்தை முதலீட்டில் சரியான நிறுவனத்தை தேர்வு செய்து லாபம் பார்ப்பதில் வல்லவர் விஜய் கேடியா. இவருடைய சந்தை முதலீடுகளை சக முதலீட்டாளர்கள் எப்போதுமே கண்காணிப்பர்.ஏனெனில் இவரை பின் தொடர்ந்தாலே பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாமல் பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையே காரணம்.

விஜய் கேடியாவை பொறுத்தவரை சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 2025 உடன் முடிந்த காலாண்டில், சுமார் 14 நிறுவனங்களில் பொது முதலீடுகளைச் செய்துள்ளார். செப்டம்பர் 5 நிலவரப்படி, இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,272 கோடியாக உள்ளது.

விஜய் கேடியா இந்த பங்குகளில தான் அதிக லாபம் பார்க்கிறார்- உங்ககிட்ட இந்த பங்குகள் இருக்கா?

விஜய் கேடியா சில நிறுவனங்களில் 1% க்கும் மேல் பங்குகள் வைத்திருக்கிறார். இவை அனைத்துமே அவருக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்துள்ளன. சந்தைகள் சரிவிலும் இந்த பங்குகள் அவருக்கு லாபம் தந்துள்ளன. அப்படி இவருடைய போர்ட்ஃபோலியோவில் 10% மேல் லாபம் ஈட்டிய முதல் 6 பங்குகளை இங்கே காணலாம். (தரவு ஆதாரம்: ACE Equity, Trendlyne)

சுதர்ஷன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ்: சுதர்ஷன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பங்கு இந்த நிதியாண்டில் மட்டும் 44% உயர்ந்துள்ளது. இதன் விலை ரூ.992-ல் இருந்து ரூ.1,424 ஆக அதிகரித்துள்ளது. விஜய் கேடியா இந்தப் பங்கில் 1.44% முதலீடு செய்துள்ளார். இதன் மதிப்பு செப்டம்பர் 5, 2025 நிலவரப்படி சுமார் ரூ.142 கோடி.

மஹிந்திரா ஹாலிடேஸ் & ரிசார்ட்ஸ்: மஹிந்திரா ஹாலிடேஸ் & ரிசார்ட்ஸ் நிறுவன பங்குகள் இதுவரை 26% உயர்ந்துள்ளன. இதன் விலை ரூ. 285-ல் இருந்து ரூ.358 ஆக உயர்ந்துள்ளது. கேடியா இந்தப் பங்கில் 1.00% முதலீடு செய்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.73 கோடி.

எலெகான் இன்ஜினியரிங்: எலெகான் இன்ஜினியரிங் கம்பெனி நிறுவனத்தின் பங்கு இந்த ஆண்டில் 23% லாபம் ஈட்டியுள்ளது. இதன் விலை ரூ.449-ல் இருந்து ரூ.553 ஆக உயர்ந்துள்ளது. விஜய் கேடியா இதில் 1.34% பங்குகளை சொந்தமாக வைத்துள்ளார். அவற்றின் ரூ. 124 கோடி.

அத்துல் ஆட்டோ: அத்துல் ஆட்டோ பங்கு 2026ஆம் நிதியாண்டில் 22% உயர்ந்து, ரூ.441-ல் இருந்து ரூ.539 ஆக அதிகரித்துள்ளது. கேடியா இதில் குறிப்பிடத்தக்க 20.09% பங்குகளைக் கொண்டுள்ளார். இதன் மதிப்பு ரூ.312 கோடி.

நியூலேண்ட் லேப்ஸ்: நியூலேண்ட் லேபரட்டரீஸ் பங்கு 20% வளர்ச்சி கண்டு, ரூ. 12,077-ல் இருந்து ரூ.14,457 ஆக அதிகரித்துள்ளது. கேடியா இதில் 1% பங்கினை கொண்டுள்ளார் அதன் மதிப்பு ரூ. 188 கோடி.

ரெப்ரோ இந்தியா: ரெப்ரோ இந்தியா பங்கு இந்த நிதியாண்டில் 16% உயர்ந்துள்ளது. இதன் விலை ரூ.397-ல் இருந்து ரூ.459 ஆக அதிகரித்துள்ளது. விஜய் கேடியா இதில் 6.34% முதலீடு செய்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.42 கோடி.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+