சமீபகாலமாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இளம் தலைமுறையினர் அதிகப்படியான முதலீடு செய்து பணம் ஈடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முதலீடு செய்யும் போதும் பென்னிப் பங்குகள் (Penny Stock) தொடங்கி அனைத்து பங்குகளையும் ஆய்வு செய்து எது மல்டிபேக்கர் பங்குகளாக மாறக்கூடிய வல்லமை கொண்டது என்பதை அலசி ஆராய்ந்து, கூடுதல் வருமானம் ஈட்ட முதலீடு செய்து வருகின்றனர்.
அதிலும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மக்களால் பெரிதும் அறியப்படாத நிறுவனங்களின் பங்குகள் மல்டிபேக்கர் எனும் அதிக லாபம் தரும் பங்குகளாக பங்குச் சந்தையை வலம் வருகின்றனர்.
அதன் அடிப்படியில் சமீபத்தில் டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பங்கு வெறும் 6 மாதங்களில் 750% உயர்ந்து மல்டிபேக்கர் வருமானத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
மல்டிபேக்கர் டெக்ஸ்டைல் பங்கு!
பங்கு சந்தையில் Vinny Overseas Ltd நிறுவனத்தின் பங்கானது 6 மாதங்களில் 750% வரை உயர்ந்து மல்டிபேக்கர் வருமானத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. இதை கவனித்த பல முதலீட்டாளர்கள் தற்போது இந்த பங்குகளை வாங்க திண்டாடி வருகின்றனர்.
வின்னி ஓவர்சீஸ் லிமிடெட் (Vinny Overseas Ltd)
இந்நிறுவனம் 1992 இல் குஜாராத்தில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் சுடிதார்கள், ஆண்களுக்கான சர்ட்டுகளை தயாரிக்கப் பயன்படும் காட்டன் மற்றும் ரேயான்களால் துணிகளை விற்பனை செய்து வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது துபாய், பஹ்ரைன், இந்தோனேசியா, இலங்கை, அமெரிக்கா, சீனா, பிரேசில், ஓமன் உட்பட இன்னும் சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
பங்கு விலை திடீர் உயர்விற்கான காரணம்!
இந்நிறுவனம் டெக்டைல் துறையில் முன்னேற்றம் காண, டிஜிட்டல் பிரிண்டிகிற்கான 3 Epson இயந்திரங்களை சமீபத்தில் நிறுவியுள்ளது. இந்த இயந்திரத்தையும் வங்கியிடமிருந்து கடன் பெற்றுதான் வாங்கியுள்ளது.
இந்த இயந்திரங்களை நிறுவுவதன் மூலம், இந்நிறுவனம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வரை லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிவேக டிஜிட்டல் பிரிண்டிங் மற்றும் உற்பத்திகளை மேற்கொள்ளும் இயந்திரங்களை கையாள வின்னி ஓவர்சீஸ் லிமிடெட் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பங்கு விலை மாற்றம்!
இந்நிறுவனத்தின் பங்கின் விலை 52 வாரத்தில் அதிகபட்சம் ரூ.16.80 மற்றும் குறைந்தபட்சம் ரூ.1.83 ஆக, விலை ஏற்ற, இறக்கம் கண்டுள்ளது. கடந்த வாரம் இப்பங்கு விலை சற்று சரிவைச் சந்தித்து ரூ.16 ஆக குறைந்தது. ஆனால் இவ்வாரம் சற்று ஏற்றம் கண்டுள்ளது.
இப்பங்கு கடந்த 2022 ஆம் ஆண்டின் கடைசி இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 170 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களில் பங்கு விலை 750 சதவீதம் உயர்ந்து மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது.
போனஸ் பங்குகள் அறிவிப்பு!
இந்நிறுவனம் அதன் பங்குதார்களுக்கு போனஸ் பங்குகளை தருவதாக அறிவித்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் பிப்ரவரி 24.02.2023 தேதியன்று இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு 13:10 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் 13,14,82,241 போனஸ் பங்குகளை (பதிவுத் தேதி பிப்ரவரி 25,2023) இன் படி 10 பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் 13 போனஸ் பங்குகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிகர லாப-நஷ்டம் விவரம்!
வின்னி ஓவர்சீஸ் நிறுவனம் டிசம்பர் முடிவடைந்த 9 மாதங்களில் ரூ.1.39 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.3.93 கோடி நிகர நஷ்டத்தை பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications