டெல்லி: கடனில் சிக்கியுள்ள தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, 7562.8 கோடி ரூபாய் இழப்பினை அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக கடனை ஈட்டியுள்ள நிறுவனமாக இது மாறியுள்ளது. இதில் டாப் 10 நிறுவனங்களில் ஹெச் பி சி எல், ஸ்பைஸ்ஜெட் மற்றும் பேடிஎம் நிறுவனங்களும் அடங்கும்.
பட்டியலிடப்பட்டுள்ள 4000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 1100 நிறுவனங்களில் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
ஹெச்பிசிஎல்
வோடபோன் ஐடியா நிறுவனத்தில் காணப்படும் மோசமான நிதி நிலைக்கு மத்தியில் , இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதன் 52 வார உச்சத்தில் இருந்து 50% மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
எண்ணெய் நிறுவனமான ஹெச் பி சி எல், இரண்டாவது பெரிய நஷ்டம் கண்ட நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது 2172 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்சத்தில் இருந்து, 36% சரிவில் காணப்படுகிறது.
விமான நிறுவனங்கள் நஷ்டம்
இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நஷ்டம் முறையே 1585.49 மற்றும் 837.88 கோடி ரூபாயாக உள்ளது.
இதே பொதுத்துறை நிறுவனமான மங்களூர் ரீபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் 1789.14 கோடி ரூபாயாக கண்டுள்ளது. இது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
பலத்த இழப்பு
இந்த பங்கின் விலையானது 1 வருட உச்சமான 127.60 ரூபாயினை எட்டிய நிலையில், 59% சரிவினைக் கண்டுள்ளது. வர்ரோக் இன்ஜினியரிங், மேக்ரோடெக் டெவலப்பர்ஸ், மஹாநகர் டெலிபோன் நிகாம், ஜேபி இன்ஃப்ராடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் பலத்த இழப்பினை கண்டுள்ளது.
பேடிஎம்
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் (பேடிஎம்) 588.8 கோடி ரூபாய் நஷ்டத்தினை இரண்டாவது காலாண்டில் கண்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டில் இந்த நிறுவனம் லாபத்தினை காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவன பங்கின் விலையானது, அதன் 52 வார உச்சத்தில் இருந்து 74% சரிவினைக் கண்டுள்ளது.
முதலீட்டாளார்கள் என்ன செய்யலாம்?
மல்டிபேக்கர் பங்குகளாக மாறலாம் என நினைத்து செய்த நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் எதிர்பார்க்காத அளவு நஷ்டத்தினையே கொடுத்துள்ளது. எனினும் சில நிறுவனங்கள் இனி ஏற்றம் காணத் தொடங்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வோடபோன் ஐடியா குறித்து கணிப்பு
குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் குறித்தஆய்வில் 19 நிபுணர்களில், 15 பேர் அதற்கு செல் ரேட்டிங்கினையே கொடுத்துள்ளனர். எனினும் சில்லறை முதலீட்டாளர்கள் இந்த நிறுவனம் சற்று ஏற்றம் காணலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் 28.57% பங்குகள் உள்ளது.
ஐடி பங்குகளை வாங்கலாம்
இதே வங்கி மற்றும் ஆட்டோ துறை பங்குகள் குறித்து பங்குகள் குறித்து, இது Over weight என நிபுணர்கள் கணித்துள்ளனர். வீழ்ச்சியடைந்த ஐடி பங்குகளை குறைந்த விலையில் வாங்க பரிந்துரை செய்துள்ளனர்.
வங்கி துறை
தொடர்ந்து நிகர வட்டி மார்ஜின் அதிகரிக்கலாம் என்றும், பல வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ள வாராக்கடன் என்பதும் தொடரலாம் என கணித்துள்ளனர். இதன் மூலம் வங்கிகள் பெரும் பலனடையலாம் என்றும் கூறியுள்ளனர். ஆக வரவிருக்கும் காலாண்டுகளில் அதன் எதிரொலி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நிபுணர்கள் எதிர்பார்ப்பு
ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் லார்ஜ் கேப் வங்கிகள், தொழிற்துறை மற்றும் ரியல் எஸ்டேட், பவர் துறை, ஆட்டோமொபைல் துறை, பார்மா, கேஸ், இன்சூரன்ஸ் மற்றும் கேப்பிட்டல் மார்கெட்ஸ், நுகர்வோர் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு வங்கிகள் என பலவும் பலனடையலாம் என கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications