இந்தியாவில் தொலை தொடர்பு சேவை வழங்கும் முக்கிய தனியார் நிறுவனமான வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனத்தின் பங்குகள் ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று ஒரே நாளில் மட்டும் 7.5% உயர்ந்தன. கடந்த 2 வர்த்தக அமர்வுகளில் மட்டும் வோடஃபோன் ஐடியாவின் பங்குகள் 16% உயர்ந்து, ஒரு பங்கு 7.40 ரூபாய் என வர்த்தகமானது.
வோடஃபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு பல்வேறு நிவாரண விருப்பங்களை தொலைத்தொடர்பு துறை (DoT) பரிந்துரைத்துள்ளது. சட்டரீதியான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான தற்போதைய தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதும் இந்த பரிந்துரைகளில் அடங்கும். பிரதமர் அலுவலகம் இந்த நிவாரண நடவடிக்கைகளை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தொலைத்தொடர்பு துறை, வோடஃபோன் ஐடியாவுக்கு நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த கால அவகாசத்தை நீட்டிப்பது, வருடாந்திர தவணைகளைக் குறைப்பது, மற்றும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) செலுத்துதலில் அபராதம் மற்றும் வட்டி அபராதங்களை தள்ளுபடி செய்வது போன்ற பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு சுமார் 83,400 கோடி ரூபாய் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகையாக உள்ளது. இதில் மார்ச் 2025 முதல் ஆண்டுக்கு சுமார் 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட வேண்டும். அபராதம் மற்றும் வட்டி உட்பட அரசுக்கு இந்நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த தொகை சுமார் 2 லட்சம் கோடி ரூபாயாகும்.
நிதி ஆதாரங்கள் இன்றி நிறுவனம் தொடர்ந்து செயல்பட முடியாது என வோடஃபோன் ஐடியா மீண்டும் மீண்டும் கூறி வருகிறது, வங்கிகளும் நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக கடன் வழங்க தயக்கம் காட்டுகின்றன.தற்போதைக்கு இந்நிறுவனத்தில் 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களும், சுமார் 198 மில்லியன் சந்தாதாரர்களும் உள்ளனர். மூலதனச் செலவுகளுக்கு நிதி திரட்டுவதற்காக வங்கி அல்லாத வழிகளை வோடஃபோன் ஐடியா ஆராய்ந்து வருகிறது.
AGR நிலுவைத் தொகை தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக கடன் வழங்குபவர்களுடனான பேச்சுவார்த்தைகள் நின்று போயுள்ளன. மார்ச் 2026 காலக்கெடுவுக்கு முன்னதாக AGR சிக்கலைத் தீர்க்குமாறு அரசுக்கு வோடஃபோன் ஐடியா கோரிக்கை விடுத்துள்ளது. இது வங்கிகளுக்கு நம்பிக்கையளித்து நிதி ஆதரவைப் பெற உதவும் என தலைமை செயல் அதிகாரி அக்சய் மூந்த்ரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே அரசு தொலைதொடர்பு துறையின் பரிந்துரைகளை ஏற்கும் என்ற நம்பிக்கையில் இந்நிறுவனத்தின் பங்கு இரண்டு நாட்களில் 16% உயர்ந்துள்ளது. மோதிலால் ஓஸ்வால், வோடஃபோன் ஐடியா பங்குகளை 'விற்க' பரிந்துரைத்துள்ளது. ஒரு பங்குக்கு 6 ரூபாய் என்ற இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. நிறுவன சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதை காரணமாக சுட்டிக்காட்டுகிறது.
ICICI செக்யூரிட்டிஸ், வோடஃபோன் ஐடியா பங்குகளை 'வைத்திருக்க' பரிந்துரைத்துள்ளது. ஒரு பங்குக்கு 7 ரூபாய் என்ற இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. மார்ச் 2026 க்குள் AGR சிக்கலுக்கு ஒரு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையே இந்த பரிந்துரைக்கு காரணம் என கூறுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications