ராதாகிஷன் தமானி பங்கு வைத்திருக்கும் நிறுவனம்.. 1 பங்குக்கு 10 பங்குகள் போனஸ் என அறிவிப்பு

மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற முதலீட்டாளர்களில் ஒருவரான ராதாகிஷன் தமானி பங்கு வைத்திருக்கும் நிறுவனம் 1 பங்குக்கு 10 பங்குகளை போனஸாக வழங்குவது என அறிவித்துள்ளது. விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் (VST Industries) என்ற நிறுவனம், சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்திய புகழ்பெற்ற முதலீட்டாளரான ராதாகிஷன் தமானி பங்கு வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக மும்பை பங்குச்சந்தை தளத்தில் வெளியாகி இருக்கும் தகவலின் படி, ராதாகிஷன் தமானி இந்த நிறுவனத்தில் 5,35,185 ஈக்விட்டி பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார், அவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் 244 கோடி ரூபாய் ஆகும். அதாவது இந்த நிறுவனத்தில் 3.47 சதவிகித பங்கு அவருக்கு சொந்தமாக இருக்கிறது.

ராதாகிஷன் தமானி பங்கு வைத்திருக்கும் நிறுவனம்.. 1 பங்குக்கு 10 பங்குகள் போனஸ் என அறிவிப்பு

அண்மையில் இந்த நிறுவனம் போனஸ் பங்குகள் வழங்கப்படும் என முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. போனஸ் பங்குகளை வழங்குவதற்கான ரெக்கார்ட் தேதி செப்டம்பர் 6 என இந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி செப்டம்பர் 6ஆம் தேதியன்று இந்நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர்கள் போனஸ் பங்குகளை பெற தகுதி பெறுவர்.

வழக்கமாக நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் நபர்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் , நிர்ணயம் செய்யப்பட்ட அளவீட்டில் அனைத்து முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பங்குகளை வழங்குவதையே போனஸ் பங்குகள் என அழைக்கிறோம்.

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை பொறுத்தவரை 10:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இருக்கிறது. அதாவது பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் 10 பங்குகள் போனஸாக கிடைக்கும். இதற்கான ரெக்கார்ட் தேதி செப்டம்பர் 6ஆம் தேதி ஆகும். செப்டம்பர் 2ஆம் தேதி அன்று இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4,562 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 7,053 கோடி ரூபாய் ஆகும். இது மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவன பங்கின் மதிப்பு 2024ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 34 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 36 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிறுவன பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 4,920 ரூபாய் ஆகும், 52 வார குறைந்தபட்ச மதிப்பு 3,159 ரூபாய் ஆகும். 2024ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 1,500 கோடி ரூபாய், லாபம் 302 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் 53.37 சதவீத பங்குகளை சொந்தமாக வைத்துள்ளனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+