அமெரிக்கா-சீனா வர்த்தக போரின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது, சீனாவை கட்டம் கட்டி அடித்து வந்த அமெரிக்கா, அரிய உலோகத்தால் வரி விதிக்காமல் இருந்தது. ஆனால் சீனாவின் சமீபத்திய அரிய உலோக கட்டுப்பாடுகள் டிரம்ப்-ஐ 100 சதவீத வரியால் பதிலடி கொடுக்க வைத்துள்ளது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் சீனாவின் புதிய கட்டுப்பாடுகள் சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும் என கூறிய டிரம்ப், உலக நாடுகளை சீனா மீது வரிகளை விதிக்கவும், சீன பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

இதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச் சந்தை ஷட்டவுன் அச்சம், ரெசிப்ரோக்கல் வரி பாதிப்பு ஆகியவற்றுக்கும் மத்தியிலும் கடந்த ஒரு மாதமாக நிலையான வர்த்தகத்தை பெற்று வந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை மௌன விரதம் கலைந்தது போல் உடைந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக புதிய வர்த்தக வரிகளையும் மென்பொருள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளையும் அறிவித்ததால், அமெரிக்க பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
டிரம்ப், தனது சமூக ஊடகம் Truth Social-இல், சீனாவின் அரிய உலோக ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு எதிராக "பெரிய அளவிலான வரி உயர்வு"யை விதிக்கிறோம் என்று அறிவித்தார். சீனா, அரிய உலோக தாதுக்கள் மற்றும் காந்தங்களுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில் சமீபத்தில் அதன் தயாரிப்பு மற்றும் பிராசஸிங் தொழில்நுட்பங்களுக்கும் கட்டுப்பாடுகளை விரிவாக்கம் செய்தது.
இந்த அரிய உலோகத்தால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், ஜெட் இன்ஜின்கள் போன்ற பல உயர்தர தொழில்நுட்ப பொருட்களின் உற்பத்திக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. இந்த நிலையில் டிரம்ப்-ன் 100 சதவீத வரி விதிப்பு உலகின் இரு பெரிய பொருளாதாரங்களிடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என்ற அச்சம் தான் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, வால் ஸ்ட்ரீட் சந்தை பெரும் சரிவை சந்தித்தது. S&P 500, ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதன் மோசமான நாளாக 2.7 சதவீதம் சரிந்து 6,552.51-ஆக முடிந்தது, 182.60 புள்ளிகள் இழப்பு.
இதேபோல் டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ் 878 புள்ளிகள், 1.9 சதவீதம் குறைந்து 45,479.60-ஆக முடிந்தது. Nasdaq காம்போசிட் 3.6 சதவீதம் சரிந்து 22,204.43-ஆக முடிந்தது, 820.20 புள்ளிகள் இழப்பு.
S&P 500 குறியீட்டில் 7-ல் 6 பங்குகள் சரிந்தன Nvidia, Apple போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டன. காலை நேரத்தில் சிறு உயர்வு இருந்தது, ஆனால் டிரம்பின் பதிவு சந்தையை தலைகீழாக்க புரட்டிப்போட்டு உள்ளது.
இந்த சரிவின் தாக்கம் கச்சா எண்ணெய் சந்தையிலும் ஏற்பட்டது. அமெரிக்க கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலை 4.2 சதவீதம் குறைந்து 58.90 டாலராக முடிந்தது.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications