தொப்பென்று விழுந்த அமெரிக்க பங்குச்சந்தை.. திடீர் யூ-டர்ன்.. என்ன நடந்தது..?

அமெரிக்காவின் அக்டோபர் மாத பணவீக்க தரவுகள் எதிர்பார்த்தது போலவே 3.8% ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்த 3.7 சதவீத பணவீக்கம் தற்ரோது உயர்ந்துள்ளது, இதனால் AI துறை சார்ந்த பங்குகள் அதிரடியாக சரிந்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் பணவீக்கம் அதிகரிப்பதை பார்த்து பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தினால், அது ஏஐ துறைக்கும், அமெரிக்க பொருளாதாரத்திற்கும் மோசமானதாக இருக்கும் என அறிவித்தார். தற்போது பணவீக்கம் மோசமான நிலைக்கு சென்றுவிட்ட நிலையில் வட்டி விகிதம் உயர்வு உறுதியாகியுள்ளது.

 தொப்பென்று விழுந்த அமெரிக்க பங்குச்சந்தை.. திடீர் யூ-டர்ன்.. என்ன நடந்தது..?

இதேவேளையில் டிரம்ப் அரசு 14 நாடுகள் மீது இறக்குமதி வரி விதிக்கும் பரிந்துரையை முன்வைத்துள்ளது. பணவீக்கம் மோசமாக இருக்கும் வேளையில், இதை கூடுதலாக இக்கட்டான நிலைக்குள் தள்ளும் வகையில் இந்த புதிய வரி பரிந்துரை வந்துள்ளது.

இவை அனைத்தும் அமெரிக்கப் பங்குச்சந்தையின் தலையெழுத்தை மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் அமெரிக்க பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான நாஸ்டாக் ஒருகட்டத்தில் 4.6% வரை சரிந்தது. தற்போது Nasdaq 2.5% சரிவும், S&P 500 2.6% சரிவும், Dow Jones 0.5% சரிவை சந்தித்துள்ளது.

இதோடு ஏஐ, டேட்டா பங்குகள் அதிகளவில் சரிந்துள்ளது. உதாரணமாக Nvidia பங்கு விலை 8.6% சரிந்ததுள்ளது, Philadelphia Semiconductor Index 5.8% வீழ்ச்சி கண்டுள்ளது.

ஜென்சன் ஹுவாங் மீண்டும் என்விடியாவின் சிஇஓ-ஆக பொறுப்பேற்றது நம்பிக்கையை அளித்தாலும், AI துறை மீதான அச்சம் நீடிக்கிறது. ஆனால் இந்த மோசமான சரிவில் இருந்து மீண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+