அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையே கிரீன்லாந்து விவகாரம் பற்றி எரிய தொடங்கியுள்ளது. இது அமெரிக்க பங்குச்சந்தையை கடுமையாக வீழ்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே இந்திய பங்குச்சந்தையிலும் இன்று கடுமையான வீழ்ச்சியை காண போகிறோம்.
கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்க பங்குச்சந்தையை அதுல பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டிருக்கிறது. அமெரிக்க பங்குச்சந்தையின் மூன்று முக்கிய குறியீடுகளுமே மூன்று மாதங்களில் இல்லாத சரிவை கண்டிருக்கின்றன. ஒரே நாளில் பெருமளவு அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ந்து இருக்கிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் இன்று வலுவாக எதிரொலிக்க போகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எதிர்ப்பு தெரிவிக்க கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு முதலில் பத்து சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பதில் வரி விதிக்கப் போவதாக கூறி இருக்கின்றன.
தினம் தோறும் கிரீன்லாந்து விவகாரம் பூதாகரமாக மாறி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையிலான மோதல் வலுக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்குச்சந்தைகளை கடுமையாக வீழ்ச்சி அடைய செய்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை இதுவரை இல்லாத சரிவை சந்தித்து இருக்கிறது. அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருக்கும் பணத்தை எடுத்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் பக்கம் திருப்பி விட தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக பங்குச்சந்தைகள் சரிந்து தங்கம் வெள்ளியின் விலை வரலாற்று உச்சங்களை தொட்டு வருகின்றன.
அமெரிக்கா பங்குச் சந்தையின் மூன்று ஈக்விட்டி பெஞ்ச் மார்க் குறியீடுகளுமே கடந்த மூன்று மாதங்களில் இல்லாத மோசமான சரிவை சந்தித்து இருக்கின்றன. எஸ்&பி 500 குறியீடு 143 புள்ளிகள் அதாவது 2.06 சதவீதம் சரிந்து 6,796 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்து இருக்கிறது. நாஸ்டாக் கம்போசைட் 561 புள்ளிகள் சரிந்துள்ளது, அதாவது 2.39 சதவீதம் சரிவடைந்து 22,954 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்து இருக்கிறது. டவ் &ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் குறியீடு 870 புள்ளிகள் அதாவது 1.76 சதவீதம் சரிவடைந்து 48,488 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்து இருக்கிறது.
முதலீட்டாளர்கள் அச்ச உணர்வு காரணமாக பங்குகளை பெருமளவில் விற்பனை செய்து லாபம் பார்க்கத் தொடங்கினர் இதுவே பங்கு சந்தை சரிவதற்கு மிக முக்கிய காரணம். அமெரிக்கா பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை கண்காணிக்கும் குறியீடு 20 புள்ளிகள் அதிகரித்திருக்கிறது, கடந்த 20 நாட்களில் இல்லாத அளவிற்கு அமெரிக்கா பங்கு சந்தையில் நேற்று மட்டும் பங்குகள் பெருமளவில் விற்பனையாகி இருக்கின்றன.
ஏற்கனவே நேற்று ஒரே நாளில் இந்திய பங்குச்சந்தை 8 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை கண்டது. 700க்கும் அதிகமான பங்குகள் அதுல பாதாளத்திற்கு சென்றன. ஏழு மணி நேரத்திலேயே முதலீட்டாளர்கள் 9 லட்சம் கோடி ரூபாய் வரை இழந்து கண்ணீர் வடித்தனர்.இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை ரத்தக் களறியாக தான் காட்சியளிக்க போகிறது என்பதையே அமெரிக்க பங்குச்சந்தையின் முடிவுகள் காட்டுகின்றன. பங்குச்சந்தைகள் வீழ்கிறது என்றால் நிச்சயம் தங்கம், வெள்ளி விலையும் உயர போகிறது என்றே அர்த்தம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications