இந்தியாவில் பிளிப்கார்ட், மின்திரா, போன்பே போன்ற நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் வால்மார்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முதல் முறையாக 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது.
உலகளவில் சில்லறை வர்த்தக பிரிவில் இருக்கும் எந்தொரு நிறுவனமும் இதுவரையில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டாத நிலையில், முதல் முறையாக வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது வால்மார்ட். கடந்த ஒரு ஆண்டில் இந்நிறுவன பங்குகள் சுமார் 26 சதவீதம் உயர்ந்து மூலம் இந்த சாதனையை தொட்டுள்ளது.

இந்த மைல்கல் இரண்டு வாரங்களுக்கு முன்பு வால்மார்ட் நாஸ்டாக்-100 குறியீட்டில் இடம்பெற்றதற்கு அடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாஸ்டாக்-100 குறியீடு என்பது அமெரிக்காவில் இருக்கும் நிதி அல்லாத அதிக மதிப்புடைய நிறுவனங்களை கொண்ட குறியீடாகும்.
இந்த குறியீட்டில் பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராசெனெகா இருந்த நிலையில் கடந்த வாரம் சந்தை மதிப்பீட்டு அடிப்படையில் அதை வெளியேற்றி இக்குறியீட்டுக்குள் வால்மார்ட் நுழைந்தது. இந்த மாற்றம் வால்மார்ட்டின் வலுவான வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
பொருளாதார சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் வால்மார்ட் பங்கு S&P 500 குறியீட்டின் 16 சதவீத உயர்வை விட அதிகமாக 26 சதவீதம் உயர்ந்துள்ளது. வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் உலக அளவில் வலுவடைவது பொருளாதாரத்தில் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
உலகளவில் சந்தை மதிப்பு (Market Cap) அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியல் தற்போது அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்துகிறது. NVIDIA 4.3 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் பங்கு விலை 62.85% உயர்ந்துள்ளது. AI மற்றும் சிப் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதை தொடர்ந்து கூகுளின் தாய் நிறுலனமான அல்ஃபாபெட் 4.1 டிரில்லியன் மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆப்பிள் 3.9 டிரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. மைக்ரோசாஃப்ட் 3 டிரில்லியன் டாலர் மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளது. அமேசான் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் 1.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஆறாம் இடத்தில் உள்ளது. TSMC 1.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஏழாம் இடத்தில் உள்ளது. சவுதி அராம்கோ 1.6 டிரில்லியன் டாலர் மதிப்புடன் எட்டாம் இடத்தில் உள்ளது. டெஸ்லா 1.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஒன்பதாம் இடத்தில் உள்ளது. ப்ராட்காம் 1.4 டிரில்லியன் டாலர் மதிப்புடன் பத்தாம் இடத்தில் உள்ளது.
பெர்க்ஷயர் ஹாதவே 1.0 டிரில்லியன் டாலர் மதிப்புடன் பதினோராம் இடத்தில் உள்ளது. வால்மார்ட் 1.0 டிரில்லியன் டாலர் மதிப்புடன் பன்னிரண்டாம் இடத்தில் உள்ளது. எலி லில்லி 911.69 பில்லியன் டாலர் மதிப்புடன் பதின்மூன்றாம் இடத்தில் உள்ளது. ஜேபிமார்கன் சேஸ் 851.82 பில்லியன் டாலர் மதிப்புடன் பதின்நான்காம் இடத்தில் உள்ளது. சாம்சங் 772.88 பில்லியன் டாலர் மதிப்புடன் பதினைந்தாம் இடத்தில் உள்ளது.
டென்சென்ட் 661.25 பில்லியன் டாலர் மதிப்புடன் பதினாறாம் இடத்தில் உள்ளது. விசா 644.81 பில்லியன் டாலர் மதிப்புடன் பதினேழாம் இடத்தில் உள்ளது. 18ஆம் இடத்தில் Exxon Mobil நிறுவனம் 605 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது, 19ஆம் இடத்தில் அஸ்டாரசென்கா 579.21 பில்லியன் டாலர் மதிப்பில் உள்ளது, ஜான்சன் & ஜான்சன் 563.05 பில்லியன் டாலர் மதிப்பில் 20வது இடத்தில் உள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications