ஆப்பிள் பங்குகளை விற்ற வாரன் பபெட்.. புதிதாக 3 நிறுவனத்தில் முதலீடு..!

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளரான வாரன் பபெட்-ன் Berkshire Hathaway தனது முதலீட்டில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. பொதுவாக வாரன் பபெட் குறுகிய கால முதலீட்டு மீது நம்பிக்கையில்லாதவர், இதனால் இவரது நிறுவனத்தின் முதலீடுகள் பெரும்பாலானவை நீண்ட கால முதலீடாகவே இருக்கும்.

இந்நிலையில் வாரன் பபெட்-ன் Berkshire Hathaway நிறுவனம், உலகின் முன்னணி டெக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் செய்திருந்த முதலீட்டைக் குறைத்துள்ளது.

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்துவிட்டுப் புதிதாக 3 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது Berkshire Hathaway நிறுவனம்.

ஆப்பிள் பங்குகள் விற்பனை

ஆப்பிள் பங்குகள் விற்பனை

ஆப்பிள் நிறுவனத்தில் செய்திருந்த முதலீட்டைக் குறைத்த வாரன் பபெட்-ன் Berkshire Hathaway நிறுவனம் புதிதாக டெலிகாம் சேவை நிறுவனமான வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ், இன்சூரன்ஸ் புரோக்கர் மார்ஷ் அண்ட் மெக்லெனன் காஸ் மற்றும் சேவ்ரான் கார்ப் ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

டிசம்பர் காலாண்டு

டிசம்பர் காலாண்டு

இந்த 3 நிறுவனத்திலும் முதலீடு செய்யப்பட்ட பங்குகளும் ஒதுக்கப்பட்ட நிலையில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை டிசம்பர் காலாண்டில் வார்ன் பபெட் நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காத்த நிலையில் தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவல் வெளியான காரணத்தால் இந்த 3 நிறுவனப் பங்குகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.

வாரன் பபெட்-ன் Berkshire Hathaway

வாரன் பபெட்-ன் Berkshire Hathaway

வாரன் பபெட்-ன் Berkshire Hathaway நிறுவனம் ஆப்பிள் பங்குகளை விற்பனை செய்துவிட்டுப் புதிதாகச் செய்த முதலீடு மூலம் 8.6 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை டெலிகாம் சேவை நிறுவனமான வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலும், 499 மில்லியன் டாலர் தொகையை இன்சூரன்ஸ் புரோக்கர் மார்ஷ் அண்ட் மெக்லெனன் காஸ் நிறுவனத்திலும், 4.1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை சேவ்ரான் கார்ப் நிறுவனத்திலும் முதலீடு அளவு உயர்ந்துள்ளது.

120 பில்லியன் டாலர்

120 பில்லியன் டாலர்

2020ஆம் ஆண்டின் இறுதியில் வாரன் பபெட்-ன் Berkshire Hathaway நிறுவனத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு 120 பில்லியன் டாலராக இருந்தது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் மீதான முதலீட்டை குறைத்தாலும், Berkshire Hathaway நிறுவனம் செய்த முதலீட்டு அளவுகளில் ஆப்பிள் நிறுவனம் தான் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

வங்கி பங்குகள் குறைப்பு

வங்கி பங்குகள் குறைப்பு

இதேபோல் வாரன் பபெட்-ன் Berkshire Hathaway நிறுவனம் பல்வேறு வங்கிகளில் செய்திருந்த முதலீடுகளைக் குறைத்துள்ளது குறிப்பாக ஜேபி மோர்கன் சேஸ் அணட் கோ, பிஎன்சி பைனான்சியல் சர்வீசஸ் குரூப், எம் அண்ட் டி பேங் கார்ப் ஆகிய நிறுவனங்களில் இருந்து வெளியேறியுள்ளது. வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் தனது முதலீட்டு அளவீட்டை 59 சதவீதமாகக் குறைத்துள்ளது.

பார்மா பங்குகள்

பார்மா பங்குகள்

மேலும் 2020ல் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக Berkshire Hathaway நிறுவனம் பார்மா நிறுவனத்தில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்துள்ளது. இதன் படி மெர்க் அண்ட் கோ, அப்பிவி இன்க், பிரிஸ்டோல் மேயர்ஸ் கோ, சமீபத்தில் Pfizer ஆகிய நிறுவனங்களில் முதலீட்டை அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+