வாரன் பஃபெட் விளைவு இந்திய ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு..!
உலகளவில் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் அதிகமாக உயர்ந்து காணப்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷைர் ஹேடாவேஸ் 10 மில்லியன் டலரை அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக முதலீடு செய்துவந்ததே ஆகும்.

வெள்ளிக்கிழமை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.4 சதவீதம் உயர்ந்து 445 ரூபாயாக முடிவடைந்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 1.93 சதவீதம் உயர்ந்து 73.90 ரூபாயாக முடிந்தது. இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டெர் குளோப் ஏவியேஷன் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து 863.7 ரூபாயாக முடிந்தது.
வாரன் பஃபெட்டின் நிறுவனம் எப்போது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீட்டைத் துவங்கியதோ அப்போது முதல் அந்தத் தாக்கத்தினால் மாற்றம் இந்திய சந்தையிலும் தெரிய ஆரம்பித்தது.
இதனைப் பார்க்கும் போது முதலீட்டாளர்கள் எப்போதும் ஒரே மாதிரியான பங்குகளை வாங்குவதை விடப் புதிய எண்ணங்களிலும் உள்ளனர் என்பதைப் பார்க்கமுடிகின்றது.

சந்தை நிலவரத்தில் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 9000 புள்ளிகளைத் தொட இருக்கின்றது இதற்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பங்குகளும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.
சென்ற ஒரு வாரத்தில் மட்டும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 18 சதவீதம் வரை உயர்வைச் சந்தித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 17 சதவீதம், இண்டெர் குளோப் ஏவியேஷன் 5 சதவீதம் என இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications