வாரன் பஃபெட் ஒரு சிறந்த முதலீட்டாளர். இவர் பெர்க்ஷயர் ஹாத்வே என்ற முதலீட்டு நிறுவனத்தின் மூலம் பல பெரு நிறுவனங்களின் பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார். அப்படித்தான் இவர் இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளையும் பெற்றிருந்தார். ஆனால் சமீபத்தில் திடீரென வாரன் பஃபெட், ஆப்பிள் நிறுவன பங்குகளை விற்கத் தொடங்கினார். அதே நேரம் தனது கையில் இருக்கும் பணத்தையும் அதிகரிக்க தொடங்கினார்.
இந்தச் செய்தி வெளியாக தொடங்கியதும் பலருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இவர் ஒரு பிரபல முதலீடாளர்.. என்பதால் இவருடைய யுக்தியை பயன்படுத்துபவர்களும் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் வாரன் பஃபெட்-இன் முடிவு சரியானதா? எதனால் இப்படி செய்கிறார்? என்ற குழப்பம் தலைக்கு ஏறியது. சமூக ஊடகங்களில் இது ஒரு பெரிய விவாதமாகவே மாறியது.

மீம்ஸ் கிரியேட்டர்கள் இதை வைத்து மீம்ஸ் போடத் தொடங்கினர். சில பஃபெட்டின் முடிவு சரியானது என்று பாராட்டினர். ஏனெனில் ஆப்பிள் நிறுவன பங்குகள் தொடர்ந்து லாபத்தைக் கண்டு வந்ததால் அப்போது வி ற்றுப் பணத்தை வைத்திருப்பது எதிர்காலத்தில் வேறு முதலீட்டு வாய்ப்புகளை வழங்கலாம் என்று சிலர் கருதினர்.
ஆனால் சிலர் பஃபெட்டின் முடிவை விமர்சிக்க தொடங்கினார். சரியான நேரத்தில் அவர் இந்த முடிவை எடுக்கவில்லை.. இன்னும் கொஞ்சம் பொறுத்து இருக்கலாம் என்று எண்ணினர். ஏனெனில் அப்போது வாரன் பஃபெட் ஆப்பிள் பங்குகளை விற்பனை செய்யும்போது அவை தொடர்ந்து லாபம் கொடுத்துக் கொண்டிருந்தன. திடீரென பங்குச்சந்தை சரியத் தொடங்கியது. அப்போதுதான் பஃபெட்டின் முடிவு சரியானது என்று பலருக்கும் புரிய தொடங்கியது
வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் 2024-ஆம் ஆண்டு அதன் ரொக்கப்பணம், எளிதில் விற்பனை செய்து பணம் ஈட்டக்கூடிய சொத்துக்கள் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க தொடங்கின. இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கின. இதனால் அவர்களுடைய மொத்த பணத்தின் மதிப்பு 334 பில்லியன் டாலர்களை எட்டியது. 2024-ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 134 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை பெற்றுள்ளது. அதே நேரம் தங்கள் சொந்த பங்குகளை திரும்ப வாங்குவதற்கு வெறும் 3 பில்லியன் மட்டுமே செலவு செய்துள்ளது. பங்குகளை வாங்குவதை விட விற்பதிலேயே 2024-ஆம் ஆண்டில் வாரன் பஃபெட் கவனம் செலுத்தியுள்ளார்.
ஏன் வாரன் பஃபெட் ஆப்பிள் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை விற்பனை செய்தார் தெரியுமா?: இதற்கு முன்னர் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் 906 மில்லியன் மதிப்புள்ள ஆப்பிள் பங்குகளை வைத்திருந்தனர். அவற்றின் மொத்த மதிப்பு 174 பில்லியனாக இருந்தது. இது அந்நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட பாதி என்றே சொல்லலாம். ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் தொடர்ந்து நிறுவனம் ஆப்பிள் பங்குகளை குறைக்க தொடங்கியது.
இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 300 மில்லியன் பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். அவற்றின் மதிப்பு வெறும் 75 பில்லியன். அதேபோல பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனத்தின் பங்குகளையும் 34 சதவீதம் குறைத்தனர். இந்த வார நிலவரப்படி ஆப்பிள் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனத்தின் பங்குகள் நவம்பர் மாதத்தில் இருந்த உச்சத்தில் இருந்து ஆப்பிள் 15 சதவீதமும், பாங்க் ஆப் அமெரிக்கா 20 சதவீதமும் குறைந்துள்ளது.
வாரன் பஃபேட்டின் இந்த செயல் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக கொக்கோகோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை இவர் வைத்திருக்கிறார். இவர் நீண்ட கால முதலீட்டில் நம்பிக்கை கொண்டவர். இப்போது அவர் விற்பனை செய்த செயல்.. இவர் பங்குச் சந்தையை பார்க்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றம் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. சந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக வாரன்பெட் கருதுகிறார்.
அதேபோல "ரிச் டாட் புவர் டாட்" என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி ஒரு பெரிய சந்தை வீழ்ச்சி வரப்போவதாக தனது X பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வீழ்ச்சி வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஒரே நாளில் நாஸ்டாக் காம்போசிட் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது எஸ்என்பி 500 அதன் உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்துள்ளது. அதிகமான சரிவு குறித்த அச்சங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. சில ஆய்வாளர்கள் இதற்கு அமெரிக்க வர்த்தக கொள்கைகள், பணவீக்க அபாயங்கள், அமெரிக்கா ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளின் பொருளாதாரங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த முறை சந்தை வீழ்ச்சி அடைந்த போதும் பஃபெட் சும்மா இருக்கவில்லை. மாறாத தீவிரமாக பங்குகளை வாங்கினார். குறிப்பாக 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியின் போது பல நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். அந்த நேரத்தில் கோல்டுமேன் சாக்ஸ், பேங்க் ஆப் அமெரிக்கா போன்ற பல நிறுவனங்களின் பங்குகளை ராக் பாட்டம் பிரைசஸ் என்று சொல்லும் அளவிற்கு மிகக் குறைந்த விலையில் வாங்கினார்.
இப்போதும் சந்தை மீண்டும் சரியத் தொடங்கினாலும் 2008-இல் செயல்பட்டது போலவே மீண்டும் குறைந்த விலையில் பங்குகளை வாங்க தயாராக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஒரு நீண்ட கால சிந்தனையை கொண்டவர். குறுகிய கால லாபத்தை விட நீண்ட கால வளர்ச்சியை அதிகம் நம்புபவர். இனி வரும் காலங்களில் சந்தை நிலை எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!



Click it and Unblock the Notifications