மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இண்டெக்ஸ், இன்று காலை வர்த்தகமாக தொடங்கியதில் இருந்தே சரிவை கண்டது.
வர்த்தகம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு உள்ளேயே, சென்செக்ஸ் சுமாராக 10 சதவிகிதம் (2,990 புள்ளிகள்) சரிந்து சர்க்யூட் பிரேக்கரைத் தொட்டது.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டுமே இன்று காலை சுமார் பத்து மணிக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
ஹால்ட்
எனவே இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒத்திவைக்கப்படும் அளவிற்கு ஏன் சென்செக்ஸ் சரிந்தது, சரிவுக்கான காரணங்கள் என்ன..? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம், முதலில் சர்வதேச காரணிகளில் ஒன்றான டாலரில் இருந்து தொடங்குவோம்.
ஹால்ட்
எனவே இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒத்திவைக்கப்படும் அளவிற்கு ஏன் சென்செக்ஸ் சரிந்தது, சரிவுக்கான காரணங்கள் என்ன..? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம், முதலில் சர்வதேச காரணிகளில் ஒன்றான டாலரில் இருந்து தொடங்குவோம்.
டாலர் ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத அளவுக்கு புதிய சரிவுகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 76.164 ரூபாயைத் தொட்டு இருக்கிறது என்கிற பதட்டமும் சந்தையை சிதைத்து இருக்கிறது.
கொரோனா வைரஸ்
உலகில் சுமாராக 3.35 லட்சம் பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. அதில் சுமாராக 14,650 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமாராக 390 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்து இருக்கிறார்கள். சுமார் 7 இந்தியர்கள் இந்த கொரோனா வைரஸுக்கு பலி ஆகி இருக்கிறார்கள். இந்த பயமும் சந்தையை செம அடி அடித்து இருக்கிறது.
ஷட் டவுன்
இந்தியாவின் 75 மாவட்டங்களில், வரும் மார்ச் 31-ம் தேதி வரை ஷட் டவுன் (வணிக நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது) செய்ய இருக்கிறார்களாம். எனவே அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர மற்ற வணிக வியாபாரங்கள் எல்லாம் செய்ய முடியாது என்பதும் சந்தை சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் உற்பத்தி
இந்தியாவின் மிகப் பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி தொடங்கி மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மெர்சிடிஸ்-பென்ஸ், ஃபியாட் என பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளில் கூட தங்கள் உற்பத்தியை நிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச் சந்தைகள் சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
ஈக்விட்டி வெளிநாட்டு முதலீடுகள்
மார்ச் 20 2020 வெள்ளிக்கிழமை வரையான கடந்த ஒரு வார காலத்தில் மட்டும், சுமார் 20,908 கோடி ரூபாய் முதலீடுகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியே எடுத்து இருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த மார்ச் 2020 மாதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் இதுவரை சுமார் 51,243 கோடி ரூபாயை ஈக்விட்டி முதலீடுகளை, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியே எடுத்திருக்கிறார்கள்.
கடன் - வெளிநாட்டு முதலீடுகள்
ஈக்விட்டியைப் போல, சுமார் ஏற்கனவே இந்திய பங்குச்சந்தை, கோடி ரூபாயை கடன் பத்திரங்களில் இருந்தும் வெளியே எடுத்து இருக்கிறார்களாம். ஏற்கனவே இந்திய சந்தைகள் சரிந்து கொண்டிருக்கும் போது வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறுவதால் சரிவு இன்னும் அதிகரித்து இருக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications