இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 835 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதோடு பி எஸ் இ 500 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளில், 59 பங்குகள், இன்று ஒரே நாளில் 5 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டு இருக்கின்றன.

கடந்த ஆறு வர்த்தக நாட்களாக சுமார் 2,500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ், இன்று எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்ததற்கான காரணங்களைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
பெரிய பங்குகள்
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், பெரு நிறுவனங்களான ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், பார்தி ஏர்டெல், சிப்லா, இண்டஸ் இண்ட் பேங்க், டி சி எஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஈஷர் மோட்டார்கள் போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
1. நிலை கொண்ட உலக சந்தைகள்
நேற்று (24 செப் 2020) அமெரிக்க சந்தைகள், ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தன. அதே போல இன்று (25 செப் 2020) ஆசிய பங்குச் சந்தைகளும் ஓரளவுக்கு ஏற்றம் கண்டு வர்த்தகமாயின. இவை எல்லாம் சேர்ந்து இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
2. சரிவால் ஓடி வந்த முதலீட்டாளரக்ள்
கடந்த ஆறு வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் சுமாராக 2,750 புள்ளிகள் சரிந்து இருக்கின்றன. இதனால், பல நல்ல பங்குகளின் மதிப்பு கணிசமாக குறைந்து இருந்தது. எனவே, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் சந்தைக்கு வந்திருக்கிறார்கள். எனவே சென்செக்ஸும் 835 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
3. ஸ்டிமுலஸ் பேக்கேஜ்
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பிரச்சனையில் இருந்து, பொருளாதாரத்தை மீட்க, 2.2 ட்ரில்லியன் டாலருக்கு ஸ்டிமுலஸ் பேக்கேஜ்கை அறிவிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஒருவேளை இந்த 2.2 ட்ரில்லியன் டாலர் பேக்கேஜ் வந்துவிட்டால், அது அமெரிக்க பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பாக அமையும். இதனால் பங்குச் சந்தைகளும் புதிய ஏற்றம் காணும். இந்த நம்பிக்கையில் தான் சந்தைகள் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications