இன்று காலையிலேயே சென்செக்ஸ், கேப் டவுனில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கி, மேலும் மேலும் இறக்கம் கண்டு, சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 497 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேறு, இந்தியாவுக்கு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸின் இந்த சரிவுக்கு என்ன காரணம் என அனலிஸ்டுகள் தங்கள் கருத்துக்களை அடுக்கி இருக்கிறார்கள். அதைத் தான் ஒவ்வொன்றாகப் பார்க்க இருக்கிறோம்.
ஆசிய சந்தைகள்
கொரோனா வைரஸ் பயத்தால், ஆசியாவில் இருக்கும் அனைத்து பெரிய நாட்டு பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங் செங் சந்தை 1.69 சதவிகிதமும், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 2.63 %, தென் கொரியாவின் கோஸ்பி 3.87 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பாதுகாப்பு இல்லாமை
பங்குச் சந்தைகளில் பணம் போட்டு ரிஸ்க் எடுப்பதற்கு பதிலாக, முதலீட்டாளர்கள், தங்கம் மற்றும் அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் தங்கத்தின் விலை, கடந்த பிப்ரவரி 2013-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு விலை அதிகரித்து இருக்கிறது. சென்னையில் 24 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 35,760 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கொரோனா பாதிப்பு
இது போக, சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், அவர்களின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் இப்போது சீனாவைத் தொடர்ந்து மற்ற சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கி இருக்கிறது. எனவே உலக பொருளாதாரம் அடி வாங்குமோ என்கிற பயத்தில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றன. அதே பயத்தினாலும், பங்குச் சந்தை சரிந்து கொண்டு இருக்கிறது.
ஜிடிபி டேட்டா
National Council of Applied Economic Research (NCAER) என்கிற அமைப்பு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, 4.9 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருக்கிறார்கள். ஏற்கனவே பல்வேறு அமைப்புகளும், தேசிய புள்ளியியல் அலுவலகமும் கணித்து இருக்கும் 5.0 சதவிகிதத்தை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய சந்தைகளும் தற்போது சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.
மெட்டல் துறை
நிஃப்டியின் மெட்டல் துறை இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் பலத்த சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.
ஜிண்டால் ஸ்டீல் -7.32%,
செயில் -5.46%,
வேதாந்தா -5.13%,
ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் -5.11%, ஹிண்டால்கோ -4.58%
என சரிந்து இருக்கின்றன. இது ஒட்டு மொத்த சந்தையிலும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது என அனலிஸ்டுகள் அடுக்கி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications