26 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று தலால் ஸ்ட்ரீட் பரபரப்பாக போகிறது. வழக்கமாக விடுமுறை தினமான ஞாயிறு அன்று, இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்காக இந்திய பங்குச் சந்தைகள் கதவை திறக்கின்றன.
கடந்த சில நாட்களாகவே லோயர் சர்க்யூட் அடித்து சரிந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்பு வருமா என ஏங்கி தவித்து கொண்டிருக்கிறது. மறுபுறம், நிஃப்டி 25,600 புள்ளிகளை நோக்கி பாயுமா அல்லது கரடியின் பிடியில் சிக்கி சரியுமா என்ற பதற்றம் முதலீட்டாளர்கள் மத்தியில் தொற்றி கொண்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவின் இந்த 2026 பட்ஜெட் யாருக்கு பெரிய லாபத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது? நடுத்தர வர்க்கத்தின் வரிச் சலுகை கனவு நனவாகுமா? நாளை சந்தை தொடங்கும் முன்பே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சிறப்பு வர்த்தகம்!
பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை விடுமுறை என்றாலும், பட்ஜெட்டை முன்னிட்டு NSE மற்றும் BSE சிறப்பு வர்த்தக அமர்வை நடத்துகின்றன. இந்த சிறப்பு அமர்வில் சந்தை நேரமானது காலை 9:15 முதல் மாலை 3:30 வரை இருக்கும் என்றும், கமாடிட்டி சந்தை நேரம் காலை 9:00 முதல் மாலை 5:00 வரை வர்த்தகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விதி: இருப்பினும் நாளை நடக்கவிருக்கும் இந்த சிறப்பு வர்த்தக தினத்தில், வெள்ளிக்கிழமை வாங்கிய பங்குகளை ஞாயிற்றுக்கிழமை விற்க முடியாது. அதேபோல் ஞாயிறு அன்று வாங்கும் பங்குகளை திங்கட்கிழமை விற்க முடியாது.
பட்ஜெட் நாள் அதிக ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் இல்லாத சூழலில், சிறிய முதலீட்டாளர்களின் உணர்வுகளால் சந்தை தாறுமாறாக நகரக் கூடும். ஞாயிறு அன்று நடக்கும் மாற்றங்கள் வெறும் சத்தமாக மட்டுமே இருக்கலாம். உண்மையான சந்தை நிலவரம் வரும் திங்கட்கிழமை அன்று தான் தெரிய வரும்.
பட்ஜெட் அன்று கவனிக்க வேண்டிய 8 பங்குகள்
1. நெஸ்டில் இந்தியா பங்கை ரூ.1332-க்கு வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 1,426 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் - ரூ.1,285 ஆகவும் கொடுத்துள்ளது.
2. GESHIP பங்கை ரூ.1,202-க்கு வாங்கலாம் என்றும், இலக்கு விலை 1,286 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் ரூ.1,160
3. பெல் (BEL) - ரூ.449-க்கு வாங்கலாம். இலக்கு விலை - ரூ.462, ஸ்டாப் லாஸ் - ரூ.442
4. தீபக் பெர்டிலைசர்ஸ் - ரூ.1,055-க்கு வாங்கலாம், இலக்கு விலை - ரூ.1,100, ஸ்டாப் லாஸ் - ரூ.1,020
5. பேடிஎம் - ரூ.1,037-க்கு வாங்கலாம், இலக்கு விலை - ரூ.1,100, ஸ்டாப் லாஸ் - ரூ.1,010
6. கம்மின்ஸ் இந்தியா - ரூ.4,112-க்கு வாங்கலாம், இலக்கு விலை - ரூ.4,300, ஸ்டாப் லாஸ் - ரூ.4,020
7. ரெயில்டெல் - ரூ.353.40-க்கு வாங்கலாம், இலக்கு விலை - ரூ.375, ஸ்டாப் லாஸ் - ரூ.345
8. செமிந்தியா ப்ராஜெக்ட்ஸ் - ரூ.639.45-க்கு வாங்கலாம், இலக்கு விலை - ரூ.677, ஸ்டாப் லாஸ் - ரூ.625
தங்கம் & வெள்ளி விலை எப்படி இருக்கும்?
தங்கம் மற்றும் வெள்ளியின் அதீத விலை உயர்வு மற்றும் குறைந்து வரும் தேவையால் நகை விற்பனை துறை, இரட்டை பாதிப்பை சந்தித்து வருகிறது. இதை சரி செய்ய நகை வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தங்க இறக்குமதி வரியை குறைக்கும் அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரி குறைக்கப்பட்டால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஞாயிற்றுக்கிழமை அன்று எம்.சி.எக்ஸ் சந்தை திறந்திருப்பதால், இந்த விலை குறைவு உடனடி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications