யெஸ் வங்கியில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகம் எனலாம். கடந்த சில தினங்களாகவே யெஸ் வங்கி பங்கானது பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
நாட்டின் மிகபெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா யெஸ் வங்கி பங்கினை விற்பனை செய்யலாம்.
ஏனெனில் இன்னும் சில வாரத்தில் யெஸ் வங்கியின் லாக் இன் காலம் முடிவடையவுள்ள நிலையில், தற்போதே ஏற்ற இறக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இந்த போக்கே தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லறை முதலீட்டாளர்கள் வசம்
47,28 லட்சம் சில்லறை முதலீட்டாளர்களின் 11,000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வி எழுந்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் கடந்த டிசம்பர் 2022ல் 13,232 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளனர். இது செப்டமர் காலாண்டில் 10,052 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வங்கி கடைசியாக 22.34% பங்கான 10,863 கோடி ரூபாய் வைத்திருந்தது.
வளர்ச்சி அதிகரிப்பு
ரிசர்வ் வங்கியின் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு பிறகு தொடர்ந்து யெஸ் வங்கி பங்கானது அதிகரித்து வரும் சூழலில், அதன் வணிக வளர்ச்சியானது அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து அதன் வணிகம் மேம்பட்டு வரும் நிலையில், அதன் சொத்தின் தரமும் தொடர்ந்து கடந்த 6 காலாண்டுகளாக மேம்பட்டு வருகின்றது.
வாரக்கடன் சரிவு
இதன் வாரக்கடன் விகிதமும் குறைந்து வரும் நிலையில், இதன் மார்ஜின் விகிதம் என்பது அதிகரிக்கலாம். இதன் வளர்ச்சி விகிதம் என்பது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வழிவகுக்கலாம். எப்படியிருப்பினும் வரவிருக்கும் காலாண்டில் வளர்ச்சி விகிதம் என்பது ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என ஐசிஐசிஐ டேரக்ட் என கணித்துள்ளது.
அதிகரிக்கலாம்
கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலையானது 33% வருவாயினை கொடுத்துள்ள நிலையில், லாக் இன் காலத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள் பங்கினை விற்பனை செய்தால், அது பங்கு விலை குறைய காரணமாக அமையலாம். அதேசமயம் முதலீட்டாளர்கள் விற்பனை செய்யாமல் ஹோல்டு செய்திருந்தால் இப்பங்குகளில் மேற்கொண்டு முதலீட்டாளர்கள் வாங்கலாம், இது இப்பங்கு நீண்டகால நோக்கில் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
மீடியம் டெர்மில் எப்படி?
எனினும் அடுத்த சில வாரங்களுக்கு இப்பங்கினில் ஏற்ற இறக்கம் என்பதை காணலாம், இது 15 -25 ருபாய்க்குள் . ஒருங்கிணைக்கப்படலாம். குறிப்பாக முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications