பங்குச் சந்தையில் குறைந்த விலையில் வாங்கி அதிக லாபம் என்ற ஆசையில் பென்னி ஸ்டாக்ஸில் (Penny Stocks) முதலீடு செய்பவர்களுக்கு, 2026ன் நிதியாண்டின் கடைசி காலாண்டு ஒரு கசப்பான பாடத்தை கற்பித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 14க்கும் மேற்பட்ட பென்னி பங்குகள் 40% முதல் 80% வரை கடும் சரிவை சந்தித்து, முதலீட்டாளர்களின் பணத்தை காற்றில் கரைத்துள்ளன.
குறிப்பாக மெஹாய் டெக்னாலஜி (-78%), அல்ஸ்டோன் டெக்ஸ்டைல்ஸ் (-58%), கிரெட்டோ சிஸ்கான் போன்ற பங்குகள் ரத்தம் சிந்தி வருவதால், சில்லறை முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சந்தையில் நிலவும் பணவீக்கம் குறித்த அச்சம் மற்றும் சர்வதேச போர்ப்பதற்றங்கள் காரணமாக, போதிய அடிப்படை வலிமை இல்லாத இந்த நிறுவனங்களின் பங்குகள் சீட்டுகட்டுகளை போல சரிந்து வருகின்றன.

உங்கள் போர்ட்ஃபோலியோவில் இந்த பங்குகள் ஏதேனும் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளதா? உங்கள் கடின உழைப்பின் சேமிப்பை பாதுகாத்து கொள்ள, நீங்கள் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன? கவனத்தில் கொள்ள வேண்டிய அந்த 14 பங்குகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த மூன்று மாதங்களில் மேற்கூறப்பட்ட 14 பென்னி பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அவை 40 - 75% வரையில் வீழ்ச்சி கண்டு முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்துள்ளன எனலாம். இந்த நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 1,000 கோடி ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ள நிலையில், அவற்றின் பங்குகளின் விலையும் 20 ரூபாய்க்கு கீழே காணப்படுவது கவனத்தில் கொள்ள வேண்டியதாகவும் பார்க்கப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற பங்குகள் மிகவும் குறைந்த விலையில் இருப்பதால், அதிக லாபம் தரும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இதுபோன்ற பங்குகளை தேர்வு செய்கின்றனர். ஆனால் குறைந்த விலை என்ற கவர்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்தை யாரும் பார்ப்பதில்லை. இந்த பங்குகளை வாங்குவது மிக எளிது. ஆனால் இதை விற்பனை செய்ய நினைக்கும்போது வாங்குவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். இதுபோன்ற நிறுவனங்களின் நிதி நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து தெளிவாக தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. இப்பங்குகள் மட்டுமல்ல பென்னி பங்குகளை பொறுத்த வரையில், சரியான திட்டமிடல் இல்லாமல் முதலீடு செய்வது தவறு.
மேற்கூறிய 14 பங்குகளில் முதலிடத்தில் இருப்பது டீப் ஹெல்த் AI இந்தியா பங்காகும். இது கடந்த மூன்று மாதத்தில் 73% சரிவைக் கண்டுள்ளது. இதன் கடன் வர்த்தக தினத்தின் முடிவு விலை 1.72 ரூபாயாகும். இரண்டாவது இடத்தில் உள்ள எக்ஸிவியா லைஃப் கேர் பங்கானது 70% சரிந்து காணப்படுகிறது. இதன் பங்கு விலை 0.49 ரூபாயாகும்.
லீடிங் லீசிங் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் கோ நிறுவனத்தின் பங்கு விலையானது 3 மாத காலகட்டத்தில் 65% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இப்பங்கின் விலையானது 1.38 ரூபாயாகும். ராமா ஸ்டீல் டியூப்ஸ் பங்கு விலையானது 57% சரிந்தும், பங்கு விலை 4.12 ரூபாயாகவும் காணப்படுகிறது. திலக் வென்ச்சர்ஸ் பங்கானது 53% சரிந்தும், பங்கு விலை 0.89 ரூபாயாகவும் உள்ளது. அவான்ஸ் டெக்னாலஜிஸ் பங்கானது 52% சரிந்தும், பங்கு விலை 0.99 ரூபாயாகவும் காணப்படுகிறது.
பிலாடெக்ஸ் பேஷன்ஸ் பங்கானது 50% சரிந்து, 0.16 ரூபாயாகவும் காணப்படுகிறது. சுபா பார்மாசெம் பங்கானது 49% சரிந்து, 0.36 ரூபாயாக காணப்படுகிறது. டைட்டன் இன்டெக் பங்கானது 45% சரிந்து, 0.73 ரூபாயாக காணப்படுகிறது. ஸ்பேஸ் இன்குபேட்ரிக்ஸ் டெக்னாலஜிஸ் பங்கானது 44% சரிந்து, 0.19 ரூபாயாக காணப்படுகிறது.
வெல்கம் டிரக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் பங்கு 43% சரிந்து, 0.25 ரூபாயாக காணப்படுகிறது. ஸ்பிரைட் அக்ரோ பங்கானது 41% சரிந்து, 0.47 ரூபாயாக காணப்படுகிறது. பதம் காட்டன் யார்ன்ஸ் பங்கானது 40% குறைந்து, 1.85 ரூபாயாக காணப்படுகிறது. யூனிசன் மெட்டல்ஸ் பங்கும் 40% குறைந்து 0.83 ரூபாயாக காணப்படுகிறது. மேற்கண்ட பங்குகளில் பலவும் 1 ரூபாய்க்கு கீழாக காணப்படுகின்றன. இதுபோன்ற பங்குச் சந்தையில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு. ஆக கவனமுடன் இருப்பது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications


