பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் என்பது கடல் அலைகளை போன்றது. ஆனால் புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் சந்தை சரியும் போதெல்லாம் விலை குறைவாகவும், தரம் அதிகமாகவும் உள்ள பங்குகளை வாங்குகின்றனர். ஒரு பங்கின் உண்மையான மதிப்பை விட, அதன் விலை குறைவாக இருப்பதை உணர்த்தும் பிஇ விகிதம்(PE Ratio) 10 -க்கும் கீழ் இருப்பதும், அதே சமயம் அந்த நிறுவனம் தனது மூலதனத்தை வைத்து எவ்வளவு சிறப்பாக லாபம் ஈட்டுகிறது என்பதைக் காட்டும் ROCE (Return on Capital Employed) 35% வரை இருப்பதும் ஒரு அபூர்வமான வாய்ப்பு. அப்படியான வாய்ப்பு கிடைக்கும்போது, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் தானே.

பொதுவாக பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) என்றாலே மெதுவாக வளரும் என்ற பிம்பம் இருந்தது. ஆனால் தற்போது பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வங்கித் துறையில் உள்ள சில அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. அப்படி அதிக டிவிடெண்ட் மற்றும் குறைந்த ரிஸ்க் கொண்ட, அதே சமயம் மல்டிபேக்கர் லாபம் தரக்கூடிய அந்த 5 வலுவான PSU பங்குகள் எவை? அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன? இந்த பங்குகளை ஏன் உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்க்க வேண்டும்? இதோ முழுமையான அலசல்..
என்னென்ன பங்குகள்?
கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி, பிபிசிஎல், பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பங்குகள், இந்திய துறையின் சராசரியை விட குறைந்த விலையில் வர்த்தகமாகும் 5 பங்குகளாகும். இது முதலீட்டாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும்.
1. கோல் இந்தியா (Coal India Ltd)
எரிசக்தி துறையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும், இந்த லார்ஜ்கேப் பொதுத்துறை நிறுவனத்தின் பிஇ விகிதம்( PE Ratio) 8.26 என்னும் அளவுக்கு குறைவாக காணப்படுகிறது. ஆர் ஓ சி இ (ROCE) 35.7% ஆகும். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் (Dividend) வழங்குவதற்கு பெயர் பெற்ற இந்த நிறுவனத்தின், பணப்புழக்கம் தொடர்ந்து வரலாற்று ரீதியாகவே வலுவாக காணப்படுகிறது. இதன் பங்கு விலையானது 418.05 ரூபாயாகும்.
2. ஓஎன்ஜிசி (ONGC):
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனம், வலுவான நிதி நிலைமையை கொண்டுள்ளது. சந்தையில் இதன் பிஇ விகிதம் 8.44 என்னும் அளவுக்கு குறைவாக காணப்படுகிறது. ஆர்ஓசிஇ 10.5% ஆகும். இப்பங்கும் தொடர்ந்து அதன் துறை சராசரி பிஇ விகிதத்திற்கு கீழாகவே வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கும் பங்கானதும் தற்போதைய சூழலில் 246.10 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது.
3. பிபிசிஎல் (BPCL)
எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனையில் லாபகரமான வளர்ச்சியை கண்டு வரும் பிபிசிஎல் நிறுவனம். இதன் நிதி அறிக்கைகள் ஆண்டுதோறும் முன்னேற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். ஆனால் இதன் பிஇ விகிதமானது 7.19 மட்டுமே. ஆர்ஓசிஇ 16.4% ஆகும். டிவிடெண்ட் வழங்கும் பங்குகளில் ஒன்றான இதன், தற்போதைய பங்கு விலை 349.70 ரூபாயாகும்.
4. பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda):
பொதுத்துறை வங்கிகளில் மிகக் குறைந்த பிஇ விகிதம் கொண்ட வங்கிகளில் இதுவும் ஒன்று. பொதுத்துறை வங்கிகள் சமீபத்திய ஆண்டுகளாக வாராக் கடன்கள் குறைந்து, லாபம் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் பேங்க் ஆப் பரோடாவின் பி இ விகிதத்தை பார்த்தால் 8.2 ஆகும். இதன் ஆர்ஓசிஇ 14.1% ஆகும். தொடர்ந்து சில்லறை கடன் பிரிவில் வளர்ச்சி கண்டு வரும் இவ்வங்கி பங்கு, நீண்ட கால அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
5. பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank):
சமீப காலமாக தனது நிதி நிலையை வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தி வருகிறது. இது மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது, இதன் பங்குகள் இன்னும் குறைந்த விலையிலேயே கிடைக்கின்றன. இதன் பிஇ விகிதம் 7.87 ஆகும். இதன் ஆர்ஓசிஇ 15% ஆகும். இதன் பங்கு விலை 120.14 ரூபாயாகும்.
மேற்கண்ட இப்பங்குகளை வாங்க நினைத்தால் சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications