ஐடி பங்குகள் மீண்டும் பாயப்போகுது! சரிவுக்குப் பிறகு 29% லாபம் தரும் 5 பவர்ஃபுல் பங்குகள் இதோ!

உங்கள் முதலீடு கண் முன்னே கரைவதை கண்டு பதறிப் போய் இருக்கிறீர்களா? கடந்த சில மாதங்களாக ஐடி (IT) துறை பங்குகள் சந்தித்த வீழ்ச்சி, பல முதலீட்டாளர்களின் தூக்கத்தை கெடுத்திருப்பது உண்மைதான். செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம், ஐடி துறையை அழித்துவிடும் என்ற பயம் சந்தையை ஆட்டிப்படைத்த நிலையில், ஐடி பங்குகள் பலவும் கடும் சரிவை சந்தித்தன. ஆனால் நிபுணர்கள் இந்த சரிவானது முடிவல்ல, இது ஒரு புதிய தொடக்கம் என கூறுகிறார்கள்.

வரலாறு திரும்பத் திரும்ப சொல்லும் ஒரு பாடம் உண்டு, அச்சம் நிறைந்த இடத்தில்தான் லாபம் மறைந்திருக்கும். தற்போது ஐடி பங்குகளின் விலை, பல ஆண்டுகால சராசரியை விட குறைவாக, தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. AI தொழில்நுட்பத்தை எதிரியாக பார்க்காமல், அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் நிறுவனங்கள், விரைவில் அசுர வளர்ச்சியை காணலாம். சிதறிக் கிடக்கும் இந்த வைரங்களை இப்போதே அள்ளி சேர்த்தால், எதிர்காலத்தில் 29% வரையிலான லாபத்தை அள்ளும் வாய்ப்பு உண்டு. பயத்தில் பங்குகளை விற்று விட்டு வெளியேறப் போகிறீர்களா அல்லது இந்த சரிவை சரியான முதலீட்டு வாய்ப்பாக கருதி, உங்கள் செல்வத்தை பெருக்க போகிறீர்களா? நிபுணர்கள் கணிப்பு என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

ஐடி பங்குகள் மீண்டும் பாயப்போகுது! சரிவுக்குப் பிறகு 29% லாபம் தரும் 5 பவர்ஃபுல் பங்குகள் இதோ!

நடப்பு ஆண்டில் இதுவரையில் ஐடி பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், தரகு நிறுவனங்கள் தற்போது ஐடி பங்குகளின் இந்த சரிவு போக்கு முடிவுக்கு வந்து விட்டதாக கூறுகின்றன. இது குறித்து ஆனந்த ரதி தரகு நிறுவனமானது ஐடி பங்குகள் தற்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளன. ஏஐ தொழில் நுட்பமானது அழிவுக்கான கருவியல்ல. இது ஐடி துறையை இன்னும் வலுவாக கட்டமைக்க போகும் ஒரு புதிய கருவி என கூறியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற பொருளாதார சூழலில் ஐடி துறையில் மந்த நிலையே காணப்படுகிறது. குறிப்பாக நிறுவனங்கள் பலவும் ஐசி செலவுகளை குறைத்துள்ளன. இது புதிய ஒப்பந்தங்களை குறைத்துள்ளன. ஏஐ ஐடி சேவைக்கான தேவைகளை குறைத்துள்ளது. ஆனால் உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 410 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்தன. இது வரும் 2026-ம் ஆண்டில் 705 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 71% அதிகமாகும். இவ்வளவு பிரம்மாண்டமான முதலீடு ஐடி துறைக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும். இந்த சூழலில் தான் தரகு நிறுவனமானது இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், எல்டிஎம், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், எம்பாசிஸ் உள்ளிட்ட பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.

Also Read

இன்ஃபோசிஸ் பங்கை வாங்கலாம் என கூறியுள்ள தரகு நிறுவனம், அதன் இலக்கு விலையை 1,547 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 21.2% அதிகரிக்கலாம் என கொடுத்துள்ளது. வரும் 2030-க்குள் சுமார் 300 முதல் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு சேவை சந்தை உருவாக வாய்ப்புள்ளது. இந்த மிகப்பெரிய சந்தையில், இன்போசிஸ் மற்ற நிறுவனங்களை விட மிக அதிகப்படியான பங்குகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது. ஏற்கனவே இன்ஃபோசிஸ் தனது வருவாயில் ஏஐ பிரிவில் 5.5% பங்கை கொண்டுள்ளது.

இன்போசிஸ் தனது Topaz எனும் ஏஐ-சார்ந்த தளத்தை உருவாக்கி, பல உலகளாவிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது அவர்களின் ஏஐ சேவைகளை மற்ற ஐடி நிறுவனங்களை விட வேகமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது.

Recommended For You

அடுத்ததாக ஹெச்சிஎல் பங்கை பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், இலக்கு விலையை 1585 ரூபாயாக கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 17.4% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்சிஎல் நிறுவனமானது ஒரு வலுவான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. இது வெறும் ஐடி சேவைகளை மட்டுமே நம்பியிருக்காமல், ER &D மற்றும் ஹெச்சிஎல் சாப்ட்வேர் என மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வருவாய் ஈட்டுகிறது.

இது இந்த நிறுவனத்திற்கு பெரும் பலமாகவும் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள், ஐடி நிறுவனத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை தேடி தந்துள்ளது. ஏஐ தொழில் நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட வாடிக்கையாளர்களால், நிறுவனம் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. இது வரும் காலங்களில் நிறுவனத்தின் வருவாயை உறுதிப்படுத்தும் ஒரு வலுவான அறிகுறியாகும்.ஆக இப்பங்கும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

எல்டிஎம் (LTI mindtree) பங்கை பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், இலக்கு விலையை 5,305 ரூபாயாக கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 24% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பெரிய பெரிய ஒப்பந்தங்களை பெற்று வரும் நிறுவனம், குறிப்பாக மத்திய அரசின் பான் 2.0, ADM எனப்படும் மென்பொருள் மேம்பாடு மற்றும் பராமரிப்பு. சர்வதேச சந்தைகளில் பெரிய பெரிய ஒப்பந்தங்கள் என பலவற்றையும் வென்று வருகிறது. இவை அனைத்து, இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதி செய்கின்றன.

பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் பங்கை பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், இலக்கு விலையை 5,751 ரூபாயாக கொடுத்துள்ளது. இது 21.1% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இரட்டை ஏஐ வியூகம் (தொழில்நுட்பத்திற்கான ஏஐ மற்றும் வணிகத்திற்கான ஏஐ) அதன் பிரத்யேக தளங்களான (SASVA, iAURA மற்றும் GenAI Hub) மூலம் வலுப்படுத்தப்படுகிறது. இவை மென்பொருள் உருவாக்க சுழற்சிகளை வேகப்படுத்துவதுடன், ஆட்டோமேஷன் மற்றும் புத்திசாலித்தனமான பணிப்பாய்வுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றன.

You May Also Like

இறுதியாக எம்பாசிஸ் பங்கை வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், இலக்கு விலையை 2,807 ரூபாயாக கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 28.7% அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. இந்த நிறுவனம் தன்னை ஒரு சாதாரண ஐடி சேவை நிறுவனமாக மட்டும் பார்க்காமல், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக முன்னிறுத்துகிறது. இதற்கு அவர்களின் NeoIP மற்றும் NeoZeta போன்ற பிரத்யேக ஏஐ தளங்கள் மிக முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் சுமார் 67% வங்கியியல், நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு துறையிலிருந்து (BFSI) மட்டுமே வருகிறது. இந்த துறைதான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக நீடிக்கிறது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு தரவுகளின்படி, BFSI துறையில் புதிய ஒப்பந்தங்களுக்கான வாய்ப்புகள் முந்தைய ஆண்டை விட சுமார் 98% அதிகரித்துள்ளது. இது அடுத்த நிதியாண்டான FY27-ல் எம்பாசிஸ் நிறுவனம் வலுவான மீட்சியை சந்திக்கும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+