நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தையானது பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், சில பங்குகள் முதலீட்டாளர்களை பல லட்சங்களுக்கு அதிபதிகளாக்கியுள்ளது. அதில் முக்கியமான பங்குகளில் ஒன்று எலைட்கான் இன்டர்நேஷனல் (Elitecon international). வெறும் ஒரு வருடத்தில் 850% வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது போதாதென்று தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவைக் கண்ட நிலையில், இன்றைய வர்த்தக தினத்தில் 5% அப்பர் சர்க்யூட்டும் ஆகியுள்ளது.
நடப்பு ஆண்டின் கடைசி வர்த்தக தினமான இன்றும் முதலீட்டாளர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31, 2024 அன்று வெறும் 10.17 ரூபாயாக இருந்த பங்கானது, இன்று 272 ரூபாயை தாண்டி காணப்படுகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 422 ரூபாய் வரையில் சென்றது. சர்வதேச அளவில் கிடைத்த ஏற்றுமதி ஆர்டர்களும், நிறுவனத்தின் வலுவான நிதி சூழலுமே இதற்கு காரணம் என கூறும் நிறுவனம், இந்த அதிரடியான வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இப்பங்கானது உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கிறதா, இந்த பங்கின் வளர்ச்சிக்கு பின்னால் உள்ள முக்கிய காரணிகள் என்ன, இனி இப்பங்கானது எப்படி இருக்கலாம் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இவ்வளவு ஏற்றமா?
எலைட்கான் இன்டர்நேஷனல் பங்கானது சமீபத்திய ஏற்ற இறக்கத்தின் மத்தியிலும், முதலீட்டாளர்களுக்கு வலுவான லாபத்தை கொடுத்துள்ளது. இந்த மல்டிபேக்கர் பங்கானது கடந்த 1 வருடத்தில் 850% வருமானத்தையும், கடந்த ஆறு மாதத்தில் 58% ஏற்றத்தையும், கடந்த மூன்று மாதத்தில் 49% சரிவையும் கண்டுள்ளது. இருப்பினும் கடந்த 1 மாதத்தில் 16% ஏற்றம் கண்டுள்ளது.
வளர்ச்சிக்கான திட்டங்கள்?
நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்க பணிகளுக்காக, கடன் வாங்கும் வரம்பை 500 கோடி ரூபாயாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு அதன் பங்குதாரர்களின் ஒப்புதலும் பெற வேண்டிய நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். இந்த நிதி வரம்பு அதிகரிப்பின் மூலம், எலைட்கான் நிறுவனமானது மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்யவும், கடன் வழங்கவும், பிணை வழங்கவும் உதவிகரமாகவும் இருக்கும். இது நிறுவனத்தின் நிதி சுதந்திரத்தையும் கணிசமாக உயர்த்தும்.
ஏற்றுமதி ஆர்டர்?
கடந்த டிசம்பர் 15, 2025 அன்று, புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எலைட்கான் ஒரு பிரம்மாண்டமான சர்வதேச ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதன் மதிப்பு சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த ஒப்பந்தமானது சிகரெட்டுகள், ஷீஷா (Sheesha), ஹூக்கா புகையிலை (Hookah tobacco) மற்றும் பிற புகையிலை சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தமாகும். இந்த நீண்ட கால ஒப்பந்தம் மூலம், நிறுவனத்திற்கு தொடர்ச்சியான வருவாய் கிடைப்பது உறுதியாகியுள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் இந்நிறுவனத்தின் பொருட்களுக்கு உள்ள பெரும் தேவையையும் காட்டுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications