பங்குச் சந்தை உலகில் ஜெஃப்ரீஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டால், ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் கவனமும் அதில் இருக்கும். 2026-ன் தொடக்கத்திலேயே இந்திய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான மின்சாரம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் லாபம் தரும் பங்குகளை தரகு நிறுவனமானது சுட்டிக் காட்டியுள்ளது.
முக்கியமாக எல்&டி, என்.டி.பி.சி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், சீமென்ஸ் எனர்ஜி உள்ளிட்ட பங்குகளில் 68% வரை அபாரமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது. அசுர வேகத்தில் வளரும் மின்சாரத் தேவை, பாதுகாப்பு துறையில் இந்தியாவின் தற்சார்பு கொள்கை மற்றும் உள் கட்டமைப்பிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் என அனைத்தும் இந்த பங்குகளுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் இந்த வெற்றி பங்குகள் உள்ளனவா? இல்லையெனில் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கலாமா, வாருங்கள் பார்க்கலாம்.

எல்&டி
பட்ஜெட் தாக்கலுக்கான இறுதி நேர கணக்கீடு தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச தரகு நிறுவனமானது பல பங்குகளை வாங்கலாம் என பட்டியலிட்டுள்ளது. தொடர்ந்து லார்சன் & டூப்ரோ பங்கை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது இந்த நிறுவனத்தின் லாப வரம்பை நிர்வகிக்கும் திறன் மீது முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஆனது குறிப்பிடுகிறது. சில வணிகப் பிரிவுகளில் செயல்பாட்டு சவால்கள் இன்னும் நீடித்தாலும், லாப வரம்பு குறித்த அச்சம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து அதன் வருவாயை அதிகரிக்க உதவலாம். இந்த சூழலில் தான் தரகு நிறுவனமான இப்பங்கை வாங்கலாம் என்றும், அதன் இலக்கு விலையை 4,715 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 24% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது.
என்.டி.பி.சி
மின்சார துறை பங்குகள் குறித்த விவாதமானது தற்போது மின் உற்பத்தி திறன் என்பதில் இருந்து மாறி, மின் தேவை என்பதை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த சூழலில் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனம் முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. தொடர்ந்து மின்சார தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தரகு நிறுவனமானது இப்பங்கை வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 440 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 28% அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கிறது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL)
தொடர்ந்து பாதுகாப்பு துறையில் முதலீட்டாளர்களின் விருப்பமான பங்காக இருந்து வரும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கை வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், இலக்கு விலையை 510 ரூபாயாக கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 22% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிறுவனம் திட்டத்தின் செயல்படுத்தும் திறன் மற்றும் நடுத்தர கால வருவாய் உறுதி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் வருவாயை ஊக்குவிக்கலாம்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
தொடர்ந்து வலுவான ஆர்டர் புத்தகத்தை கொண்டுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், அதன் தொடர்ச்சியான சேவை வருவாய் மற்றும் கடன் இல்லாத பேலன்ஸ் ஷீட் ஆகியவற்றின் உண்மையான மதிப்பு, முதலீட்டாளர்களின் தற்போதைய முடிவுகளில் இன்னும் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்று தரகு நிறுவனம் நம்புகிறது. இது நிறுவனத்தின் செயல்பாடுகளை பொறுத்து மாறுபடலாம் என கூறும் தரகு நிறுவனம், அதை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே தரகு நிறுவனம் அமையும் என்கிறது.
கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ்
கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் பவர் டிரான்ஸ்மிஷன், வீட்டு வசதி, தொழில்முறை மூலதனச் செலவினங்கள் மற்றும் ஏற்றுமதி என பல்வேறு துறைகளுடன் இந்த நிறுவனத்திற்கு தொடர்புள்ளது. இந்த சூழலில் தான் தரகு நிறுவனமானது இப்பங்கை வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 5,460 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 43% லாபத்தை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிறுவனம், அதன் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இது அதன் நீண்ட கால வருவாய் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவலாம்.
சீமென்ஸ் எனர்ஜி & ஹிட்டாச்சி எனர்ஜி
பட்டியலில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளாக கருதப்படும் சிறந்த முதலீட்டு பங்குகளில் சீமென்ஸ் எனர்ஜி & ஹிட்டாச்சி எனர்ஜி உள்ளிட்ட பங்குகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. சீமென்ஸ் பங்கின் இலக்கு விலையை 3,700 ரூபாயை கொடுத்துள்ள தரகு நிறுவனம், இலக்கு விலை சந்தை விலையில் இருந்து 48% அதிகரிக்கலாம் என கொடுத்துள்ளது. இதே ஹிட்டாச்சி பங்கின் இலக்கு விலையை 25,000 ரூபாயாகவும், இதுவும் சந்தை விலையில் இருந்து 48% அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. செயல்பாடுகள் தடையின்றி நடக்கும் பட்சத்தில், அதன் வருவாய் வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்கும் என்று தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி
டிசம்பர் காலாண்டு முடிவானது சற்று பலவீனமாக இருந்தாலும், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி பங்கிற்கு தொடர்ந்து வாங்கலாம் என ரேட்டிங் கொடுத்துள்ளது. இலக்கு விலையை 660 ரூபாயாகவும், இது சந்தை விலையில் இருந்து 68% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications