தேசிய பங்கு சந்தையில் உள்ள பங்குகள் டிரெண்டில் உள்ள நிலையில் சென்ற வார சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 44.43 புள்ளிகள் என 0.13 சதவீதம் சரிந்து 33,307.14 புள்ளிகள் எனவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 15.80 புள்ளிகள் என 0.15 சதவீதம் சரிந்து 10,226.85 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
எனவே இன்று (12/03/2018) எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம் மற்றும் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
எஸ்எச் கெல்கர்
ரசாயன நிறுவனமான எஸ்எச் கெல்கர் நிறுவனப் பங்குகளை 275 ரூபாய் கொடுத்து வாங்கினால் 318 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்றும் மோதிலால் ஒஸ்வால் பரிந்துரைக்கிறது. எஸ்எச் கெல்கர் நிறுவனம் இந்தியாவில் பெர்ஃபூம், வாசனைத் திரவங்கள், காஸ்மெடிக்ஸ் மற்றும் பிளாவர் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. எஸ்எச் கெல்கர் சந்தை மூலதனம் 40 பில்லியன் ரூபாயாக உள்ளது.
எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ்
பாலியஸ்டர் ஃபிளிம், பாலிமர்ஸ் மற்றும் பொறியியல் பிளாஸ்டிக்குகள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனமான எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை 58 ரூபாய் கொடுத்து வாங்கினால் 113 ரூபாய் வரை உயரும் என்றும் ரூத்ரா ஷேர்ஸ் & ஸ்டாக் புரோக்கார்ஸ் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. எஸ்டர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் ஒரு வருடத்தில் 46 சதவீதம் வரை உயர்ந்து லாபம் அளித்துள்ளது. சந்தை முதலீடு 4.8 பில்லியன் ரூபாயாக உள்ளது.
ஜாக்ரன் பிரகாஷன்
தைனிக் ஜாக்ரன் நிறுவன ஒரு தின சரி நாளிதழ் நிறுவனம் ஆகும். இந்தப் பங்குகளை 58 ரூபாய் கொடுத்து வாங்கினால் 113 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் பரிந்துரைத்துள்ளது. ஜாக்ரன் பிரகாஷன் ரூ. 51 பில்லியன் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.
ஐபிசிஏ லெபாரட்ரீஸ்
பார்மா நிறுவனமான ஐபிசிஏ லெபாரட்ரீஸ் 75 நாடுகளில் தங்களது தயாரிப்புகளை விற்று வருகிறது. ஒரு வருடத்தில் 25 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. சந்தை மூலதனமாக 86 பில்லியன் ரூபாயினைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனப் பங்குகளை 680 ரூபாய் கொடுத்து வாங்கினால் 837 ரூபாய் வரை உயரும் என்றும் பிரபுதாஸ் லேலதர் வாங்குவதற்காகப் பரிந்துரைத்துள்ளது.
நவகர் கார்ப்
லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான நவகர் கார்ப் மெரைன் கார்கோ ஹேண்ட்லிங், கோல்டு ஸ்டோரேஜ், ரெஃபெர் கண்டைனர்ஸ், வேர் ஹவுஸ் போன்ற சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகிறது. இந்த பங்குகளை 157 ரூபாய்க்கு வாங்கினால் 265 ரூபாய் வரை உயரும் வாய்ப்புள்ளது என்றும் ஏஞ்செல் புரோக்கிங் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
பொருத்துத் துறப்பு
இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுனர்கள் கருத்தாகும். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கும், கிரேனியம் டெக்னாலஜிஸ் நிறுவனமும் பொருப்பாகது. பங்குகளை வாங்குவதும் விற்பதும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொறுத்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications