2017 ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 5.25 சதவீதமாக உயர்ந்து 30 மாத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியால் உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, உணவுப் பொருட்களில் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மொத்த விலை பணவீக்கத்தை 30 மாத உயர்விற்குக் கொண்டு சென்றுள்ளது.
2016 டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 3.39 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜனவரி மாதத்தில் 1.07 சதவீதம் உயர்ந்து மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 5.25 சதவீதமாக உள்ளது.

அதிகப்படியாக ஜூலை 2014இல் இதன் அளவு 5.41 சதவீதமாக இருந்தது.
வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் எரிபொருள் மற்றும் பவர் பிரிவில் எப்போதும் இல்லாத அளவிற்குப் பணவீக்கத்தின் அளவு இரண்டு மடங்கு அதிகரித்து 18.14 சதவீதமாக உயர்ந்துள்ளது, டிசம்பர் மாதம் இதன் அளவு வெறும் 8.65 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான பணவீக்கம் 15.66 சதவீதத்தில் இருந்து 31.10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவை அனைத்திற்கும் காரணம் OPEC. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC, 8 வருடங்களுக்குப் பின் தனது உற்பத்தி அளவுகளைக் குறைக்க முடிவு செய்தது. இதன் எதிரொலியாகவே பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் பணவீக்கம் 2017 ஜனவரி மாதத்தில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications