அதானி கொடுத்த ஒப்பந்தம்.. ஒரே நாளில் 3% உயர்ந்த பெல் நிறுவன பங்குகள்..

இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 3 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமானது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெல் நிறுவனம் அண்மையில் அதானி பவர் நிறுவனத்திடம் இருந்து ஒரு ஒப்பந்தத்தை பெற்றது. இந்த தகவலை பெல் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்தது. இது தான் பெல் நிறுவன பங்கு மதிப்பு ஒரே நாளில் மூன்று சதவீதம் வரை உயர்வு கண்டதற்கு காரணம். ஜூன் 30ஆம் தேதி அன்று கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக பெல் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 272 ரூபாய் வரை உயர்ந்து வர்த்தகமானது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் முடிகின்ற போது பெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 264 ரூபாயாக இருந்தது .

அதானி கொடுத்த ஒப்பந்தம்.. ஒரே நாளில் 3% உயர்ந்த பெல் நிறுவன பங்குகள்..

இன்று காலை 9.30 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய உடன் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 272 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. அதானி பவர் நிறுவனத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களுக்கான கட்டமைப்பு பணிகளையும் உபகரணங்களை டெலிவரி செய்யும் ஒப்பந்தத்தை டெல் நிறுவனம் பெற்றுள்ளது. 800 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களை பெல் நிறுவனம் கட்டித்தர இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 6500 கோடி ரூபாய் என பெல் நிறுவனம் கூறி இருக்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் பெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 சதவீதம் உயர்ந்திருக்கிறது , 2025ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 15 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் பெல் நிறுவன பங்குகள் தன்னுடைய 52 வார கால உச்சத்திலிருந்து குறைந்து 176 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இதனை அடுத்து படிப்படியாக அது மீண்டும் உயர்ந்து வருகிறது.

அதேவேளையில் அதானி பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் ஜூன் 30ஆம் தேதி காலை 1 சதவீதம் உயர்ந்து 595 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த ஒரு வார காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9 சதவீதம் உயர்ந்திருக்கிறது கடந்த ஆறு மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+